(துர்க்கா) தம்பின், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு பள்ளித் தோழிகளின் மோட்டார் சைக்கிள் பயணம் படுதுயரத்தில் முடிந்தது. ஆறாம் படிவ மாண விகளான கெஜலெட்சுமி (வயது 19), எஸ்.ரம்யா (வயது 18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமுற்றனர். இருவரும் கெமெஞ்சேவில் உள்ள டத்தோ முகமது தாஹா இடைநிலைப் பள்ளியினைச் சேர்ந்தவர்கள். மோட்டார் சைக்கிள் மிக மோசமான வளைவில் கட்டுப்பாட்டை இழந்து இறுதியில் மின் கம்பத்துடன் மோதியது. இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் தலையிலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹமாசா அப்துல் ரசாக் தெரிவித்தார். ஜாலான் கூனிங் செலாத்தான் - பத்தாங் மலாக்கா சாலையின் 1.7வது கிலோ மீட்டர் பகுதியில் நடந்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு தலையில் பலத்த காயம். கை முறிந்தது. தோள்பட்டையில் பலத்த காயமும், பின் இருக்கையில் இருந்தவருக்கு தலையிலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டு மரணமடைந் தனர். பிரேத பரிசோதனைக்காக இருவரின் பிரேதங்கள் தம்பின் மருத்துவமனை தடயவியல் பிரிவிற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாக சூப்ரிண்டெண்டன் ஹமாசா அப்துல் ரசாக் தெரிவித்தார். இந்த சாலை விபத்து விவகாரம் போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41இன் கீழ் விசாரிக்கப்படும் என்று இவர் குறிப் பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்