img
img

காடுகளை அழித்து கழனியாக்கி நிலங்களை அபகரித்து விரட்டி அடிக்கும் முயற்சி ஒரு சாபக்கேடா?
சனி 15 ஜூலை 2017 16:51:30

img

கேரித்தீவு, தோட்டங்களில் குறைந்தபட்ச ஊதியத்திற்காக இரத்தம் சிந்தி வேலை செய்த சிலாங்கூர் கேரித்தீவு தோட்டப்பாட்டாளிகள் தங்களின் குடும்பத்தை வழி நடத்தும் நோக்கில் கூடுதல் வருவாய் தேடி இரவு பகல் பாராமல் உழைத்ததுடன் அங்குள்ள காடுகளை அழித்து கழனியாக்கி பயிரிட்டு அதன் பலனை அனுபவிக்கும் வேளையின்போது அங்கு சகுனிபோல் வரும் அதிகாரத்தில் இருப்பவர்கள் பாட்டாளிகள் செய்த பயிர் நிலங்களை அபகரித்து அவர்களை விரட்டி அடிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது இந்தியர்களுக்கு மட்டும் ஒரு சாபக்கேடா என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மூன்று தலைமுறையாக கேரித்தீவில் வாழ்ந்துவரும் நாங்கள் தோட்டங்களில் வேலை செய்துகொண்டே குடும்ப வருமானத்தை ஈட்டுவதற்காக அரு கிலுள்ள காடுகளை சுத்தம் செய்து பயிரிட்டு வருகிறோம். எங்களைப்போன்று மற்ற இன சகோதரர்களும் காடுகளை அழித்து பயிரிட்டு வந்த நிலையில் அவர்களுக்கு மட்டும் நிலப்பட்டாவுடன் நிலங்கள் ஒதுக்கித் தரப்பட்டுள்ளதுடன் இங்குள்ள பல பகுதிகளில் உள்ள நிலங்கள் வேறு மாநிலங்களில் உள்ள வர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால் கேரித்தீவையே எங்களின் உலகமாக நினைத்து அங்கு வாழ்ந்து வருவதுடன் முப்பது ஆண்டுகளாக பயிர் செய்து வந்த எங்கள் நிலங்களை இப்போது கோலலங்காட் நில அலுவலகம் கைப்பற்ற நினைப்பதன் உண்மையான நோக்கம்தான் என்னவென்று தங்களுக்கு தெரியவில்லையென இங்கு கம்போங் இந்தியா என அழைக்கப்படும் பகுதியில் பயிர் செய்து வந்த இருபது பேரின் நிலங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நில அலுவலகத் தின் வரம்பு மீறிய செயல் குறித்து கருத்துரைத்த இக்கிராம மக்கள் தங் களின் அதி ருப்தியை வெளிப்படுத்தினர். இங்கு ஏறக்குறைய ஒன்றே முக்கால் ஏக்கர் நிலங்களைக் கொண்டுள்ள இருபது பேரில் எழுவர் வீடுகளை கட்டியுள்ளதுடன் அவர்களில் ஒரு சிலர் தங்கள் கைவசம் வைத்திருந்த பணம் மற்றும் சேமநிதி சேமிப்பையும் எடுத்து வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்ற நிலையில் இன்னும் 90 நாட் களுக்குள் எங்களை நிலத்திலிருந்து வெளியே போகச் சொன்னால் வீடுகளின்றி நாங்கள் எங்கே போவது என எழுவரும் புலம்பிக் கொண்டிருப்பதாக கூறினர். அது மட்டுமல்லாது தங்களுக்கு வேலை இல்லாததால் வீடுகளுக்கு அருகில் ஆடு மாடுகள், கோழிகளை வளர்த்து வருவதோடு வெற்றிலை கொடி களையும் பயிரிட்டுள்ளதுடன் இன்னும் சிலர் மல்லிகைச் செடி, எலுமிச்சை செடிகளை நடவு செய்துள்ளதுடன் இதன்வழி கிடைத்து வரும் வரு மானத்தைக்கொண்டு வாழ்ந்துவரும் வேளை கோலலங்காட் மாவட்ட நில அலுவலகம் ஜூலை 4ஆம் தேதியன்று வழங்கியிருந்த நிலங்களை விட்டு விட்டு வெளியேற வேண்டும் என்ற நோட்டீஸ் எங்களை கதிகலங்கச் செய்துள்ளது என இப்பகுதியில் நிலங்களை கொண்டுள்ளவர்களான மூதாட்டி வள் ளியம்மா, செல்லம்மா, ரெங்கநாதன், சுந்தர், அம்மாசி, முருகையன், நல்லுசாமி, சுகுமாறன், ஆறுமுகம், முனியாண்டி ஆகியோர் வேதனை தெரிவித்தனர். இதனிடையே கேரித்தீவு மக்கள் எதிர்நோக்கியுள்ள விவகாரத்தை நேற்று முன்தினம் செய்தி தாள்களில் வெளியாகியுள்ளதை கண்டதைத் தொடர்ந்து நேற்று காலை சம்பந்தப்பட்ட நிலப்பகுதிக்கு விரைந்த வழக்கறிஞரும் ம.இ.கா கோலலங்காட் தொகுதி இளைஞர் பகுதித் தலைவருமான ரெ. ஸ்ரீதரன் இங்குள்ள 20 இந்தியர்கள் எதிர்நோக்கியுள்ள நிலப் பிரச்சினைக்கு சட்ட ஆலோசனை வழங்குவதுடன் தேவை ஏற்பட்டால் அவர்களுக்காக வழக்கை இலவசமாக ஏற்று நடத்தவும் தயாராக இருப்பதாக கூறினார். தம்முடைய இந்த உதவியை எதிர்த்தரப்பினரும் அரசியல் நோக்கத்துடன் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், இங்கு பாதிக்கப்பட்டுள்ளவர் கள் அனைவரும் நம் இனத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே உணர்வுடன் தாம் உதவிட முன் வந்துள்ளதாக மேலும் தெரிவித்தார். இதனிடையே கேரித்தீவில் வாழ்ந்துவரும் இந்தியர்களுக்கு அடுக்கடுக்காக தொல்லைகளை கொடுத்துவரும் தரப்பினர் தங்களின் ஆரோக்கியமற்ற நட வடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேரித்தீவு வாழைப்பிரட்டு ம.இ.கா. கிளைத்தலைவரான சு.சுப்ரமணியம் கேட்டுக்கொள்வதாக கூறினார். இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்து இங்கேயே மடியவுள்ள எங்கள் தோட்டத்து மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவது வேதனைக்குரியதாக இருக்கிறது. எங்களின் உலகமாக இருந்துவரும் கேரித்தீவில் வெளியார் யாரெல்லாம் சொந்தம் கொண்டாடிவரும் வேளை அவர்களில் பலருக்கு பட்டாவுடன் கூடிய நிலங்களும் உள்ளன. ஏற்கெனவே இங்கு நிலங்களை வைத்திருந்த 25 பேர் மாநில அரசால் ஏமாற்றப்பட்டு அந்நிலங்கள் யாவும் ஏனைய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டதைப் போன்று இப்போது இன்னொரு இந்தியர் நிலப்பகுதியை குறி வைத்திருப்பது அவர்களின் வயிற்றில் அடிப்பது போலாகும் என குறிப்பிட்ட அவர், இப்பிரச்சினைக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் முழுப்பொறுப்பேற்பதுடன் பாதிக்கப்பட்டுள்ள இருபது பேரின் நிலங்களுக்கு அதி காரப்பூர்வ பட்டா வழங்க வேண்டும் எனவும் சு.சுப்ரமணியம் வலியுறுத்தினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img