img
img

பக்காத்தானிலும் இந்தியர்கள் புறக்கணிப்பா?
சனி 15 ஜூலை 2017 12:57:38

img

கோலாலம்பூர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி உயர்மட்டத் தலைவர்கள் நியமனத்தில் முக்கியப் பதவிகளுக்கு இந்தியர்கள் நியமிக்கப்படாதது ஏன், அந்த எதிர்க் கட்சி கூட்டணியில் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்களா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆலோசகர், அவைத் தலைவர், கூட்டணித் தலைவர், துணைத் தலைவர்கள், உதவித் தலைவர்கள் ஆகிய முக்கியப் பொறுப்புகளில் ஓர் இந்தியர்கூட நியமிக்கப்படாதது அந்த எதிர்க்கட்சி கூட்டணி எந்த அளவிற்கு இந்தியர்களை கிள்ளுக்கீரையாக எண்ணியுள்ளது என்பதை தெளிவாக படம் பிடித்துக்காட்டியது. பக்காத்தான் கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்களின் நியமனங்கள் குறித்து பெட்டாலிங் ஜெயா பி.கே.ஆர். தலைமையகத்தில் நேற்று அறிவிக் கப்பட்டது. அதில் பி.கே.ஆர். கட்சியின் நடப்பு ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆலோசகராக அறி விக்கப்பட்டார். அதேவேளையில், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், பக்காத்தான் கூட்டணியின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பி.கே.ஆர். கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஜிஸா வான் இஸ்மாயில், பக்காத்தான் கூட்டணி தலைவராக நியமிக்கப்பட்டார். இதேபோன்று இதர உயர்மட்டப்பதவிகளான அந்த எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்று துணைத் தலைவர்களாக பெர்சத்து கட்சியின் தலைவர் முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், ஜ.செ.க. பொதுச்செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சித் தலைவர் ஹாஜி முகமட் சாபு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஆகக்கடைசியாக நான்கு உதவித்தலைவர் பதவிகளுக்கு சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், சோங் கியாங் ஜென் மற்றும் ஹாஜி சலாஹூடின் அயோப் நியமிக்கப்பட்டுள்ளனர். அவையில் வீரியத் தன்மையில் பேசுவதற்கும் பல பிரச்சினைகளை முன்னெடுக்கும் இந்த முக்கியப் பதவிகளுக்கு ஓர் இந்தியர்கூட நியமிக்கப்படாதது பக்காத்தான் கூட்டணி இந்தியர்களை கண்டு கொள்ளவில்லை, புறக்கணித்து விட்டது என்பதையே காட்டுகிறது என்று பலர் தெரிவித்தனர். அந்த கூட்ட ணியின் கணக்கு வழக்குகளை மட்டுமே வைத்திருக்கக்கூடிய, கூட்டணித் தலைவர்கள் கேட்கின்ற கணக்கு வழக்குகளை பற்றிய விவரங் களை சொல்லக்கூடிய பொருளாளர் பதவியை மட்டும் ஜ.செ.க. ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜ.செ.க. உதவித் தலைவருமான எம். குல சேகனுக்கு வழங்கியிருப்பது அந்த கூட்டணி இந்தியர்களுக்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது என பலர் குறைகூறினர். குறிப்பாக பக்காத்தான் கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்கள் பதவியை வகிப்பதற்கு இந்தியர்களுக்கு தகுதி இல்லையா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img