(ம.யோகலிங்கம்/ பி.எம். குணா) ஈஜோக், கோல்பீல்ட் தோட்ட புதிய தமிழ்ப்பள்ளி கட்டுமானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பெற்றோர்கள் ஷா ஆலம், மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள் ளிக்கு நிகராக கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப் பள்ளி கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்த சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிராக நேற்று அமைதி மறியலில் இறங்கினர். பொதுப் பணித்துறை தற்போது மேற்கொண்டு வரும் அடித்தளப் பணிகள் பெற்றோர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆண்டு களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட அடித்தளமிடும் பணிகளுக்கு மாற்றாக தற்போது பொதுப்பணித்துறை புதிய அடித்தளப் பணிகளை தொடங்கியுள்ளது பல ஐயப் பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது சம்பந்தமாக பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடமும், பள்ளி வாரியத் திடமும் அத்துறை கலந்தா லோசிக்கவில்லை என்றும் பெற் றோர்கள் முறையிட்டனர். சிலாங்கூர் மாநில அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நினைவுறுத்திய பெற்றோர்கள், பள்ளியின் புதிய கட்டடத்திற்கு பிள்ளைகளை அனுப்பமாட்டோம் என்று நேற்று சூளுரைத்தனர். இந்த விவகாரம் குறித்து கோலசிலாங்கூர் மாவட்ட கல்வி அலுவலகத்திடமிருந்து எந்த கடிதமும் கிடைக்கவில்லை என மாவட்ட நில அலுவலகம் கைவிரித்துவிட்டது. தனியார் நிலம் என்பதால் புதிய பள்ளி கட்டும் திட்டத்தில் தலையிட முடியாது என்று மாவட்ட கல்வி அலுவலகம் பின் வாங்கிக் கொண்டது என்று பள்ளி வாரியத் தலைவர் பிரான்சிஸ் ராஜு (வயது 58) தெரிவித்தார். அடுத்தாண்டு புதிய கட்டடம் கட்டுமானம் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. மாணவர் தங்கும் விடுதி, பல்நோக்கு மண்டபம், சிற்றுண்டிச்சாலை, விளையாட்டு மைதானம், 24 வகுப்பறைகளைக் கொண்ட இரண்டு மாடிக்கட்டடம் என கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அள்ளியிறைத்த மாநில அரசு அந்த வாக்குறுதி களையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டதாக பெற்றோர்கள் ஆவேசப்பட்டனர். சுமார் 3.9 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் கோல்பீல்ட் தோட்டத் புதிய தமிழ்ப்பள்ளிக்கு பொதுப்பணித்துறை 6 வகுப்பறைகளைக் கொண்ட ஒரு மாடிக் கட்டடம் கட்டும் திட்டம் பெற்றோர்களிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இந்த புதிய திட்டத்தில் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் கிடையாது என்று ஆத்திரப்பட்ட பிரான்சிஸ் ராஜூ, 40 லட்சம் வெள்ளி மதிப்பில் புதிய கட்டடம் எழுப்பப்படும் என்று வாக்குறுதி அளித்த மாநில அரசு பெற்றோர்களின் நீண்டக் கால போராட்டத்தை சிதறடித்துவிட்டதாக அவர் ஏமாற்றம் தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டடம் கட்டுமான வரைபடம் எங்களிடம் இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன் பள்ளியின் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நிகராக நவீன வசதிகள் கொண்ட கட்டடம் அமைக்கப்படும் என்றும் சிலங்கூர் மாநிலத்திலேயே கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப் பள்ளி, மாணவர் தங்கும் விடுதி, பல்நோக்கு மண்டபம் அடங் கிய மிகப் பெரிய தமிழ்ப் பள்ளியாக உருவெடுக்கும் என்றும் வாய் ஜம்பமடித்த மாநில பக்காத்தான் அரசின் மக்கள் பிரதிநிதிகள், இன்று இந்த அவலத் திற்கு பதில் சொல்வார்களா என்று பிரான்சிஸ் ராஜூ கேள்வி எழுப்பினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்