கோலாலம்பூர், லண்டனில் நடைபெறவுள்ள அனைத்துலக இளைஞர் அறிவியல் மாநாட்டில் மலேசிய மாணவர் யுவராஜன் பாஸ்கரன் கலந்துகொள்ளவுள்ளார். 59ஆவது அனைத்துலக இளைஞர் அறிவியல் மாநாடு வரும் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதிவரை லண்டன் இம்ரியல் கல்லூரி யில் நடைபெற்றவுள்ளது. 70 நாடுகளைச் சேர்ந்த 475 மாணவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். இம்மாணவர்கள் அனைவரும் 16 வயதில் இருந்து 21 வயதுக்கு உட்பட்டவர்களாவர். அறிவியல் துறையில் உலக தரம் வாய்ந்த பயிற்சி திட்டங்கள், நிபுணத்துவம் வாய்ந்த பேராசிரியர்கள் நடத்தும் வகுப்புகள், ஆராய்ச்சி மையங்கள், முன் னணி கல்வி மையங்களில் சுற்றுலா என இம்மாணவர்களுக்கு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே வேளையில் உலக புகழ் பெற்ற நகரங்கள், லண்டன் கோபுரம், பங்கிங்ஹாம் மாளிகை உட்பட பல இடங்களை சுற்றிப் பார்ப்பதற்கும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. இப்படி பல அம்சங்களை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டில் பங்கேற்க மலேசியாவில் இருந்து மாணவர் யுவராஜன் பாஸ்கரன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். தஞ்சோங் மாலிம் உலு பெர்ணாமைச் சேர்ந்த யுவராஜன் தற்போது பெட்ரோனாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழத் தில் பயின்று வருகிறார். இம்மாநாட் டில் கலந்துகொள்வதற்கு கிடைத்த வாய்ப்பிற்கு மகிழ்ச்சி தெரிவித்த யுவராஜன் விரைவில் லண்டனுக்கு பயணமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்பள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்
மேலும்கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்
மேலும்மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா
மேலும்