img
img

பேரா மாநில வளர்ச்சி நீரோட்டத்தில் ஓரங்கட்டப்படும் இந்தியர்கள்.
வெள்ளி 14 ஜூலை 2017 13:25:51

img

ஈப்போ, பேரா மாநிலத்தில் கிந்தா பள்ளத்தாக்கு வளர்ச்சி நீரோட்டத்தில் ஜெலப்பாங் சிற்றூர் ஓரங்கட்டப் படுகிறதா? என்ற உணர்வு மேலோங்கச் செய்வதற்கு இப்பகுதியில் வாழ்கின்ற இந்தியர்களின் உள்ளக் குமுறல் வெளிப்பாடே சாட்சியாக உள்ளது. ‘எங்க இடத்துல ஒரு பஸ் ஸ்டாப் கூட இல்லைங்க‘ என்று போட்டுடைத்தார் ஆர்.சுந்தரேசன். இது மற்றவர்களுக்கு சாதாரணமான விஷயமாக இருக்கும். ஆனால், மழை, வெயில் காலங்களில் மாணவர்களும் முதியவர்களும் பஸ் நிலையம் இல்லாமல் அருகில் உள்ள கடைகளில் தஞ்சம் இருந்து பேருந்துக்கு காத்திருப்பதை பார்க்கும்போது மிக பரிதாபமாக இருக்கும். இதுபற்றி நான் பலரிடம் பேசிவிட்டேன். ஆனால்,எல்லோரும் அலட்சியப்படுத்து கின்றனர். ஈப்போவிலிருந்து ஜெலப்பாங் வழியாகத்தான் மேரு, அமான் ஜெயா, சிம்மோர் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும். ஜெலப்பாங் பகுதியில் பொது பேருந்து நிற்பதற்கு பேருந்து நிலையம் இல்லை. இதனை யார் சரிபடுத்துவது. மக்கள் பிரதிநிதிகள் இதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. உள்ளூர் அரசியல் தலைவர்கள் கண்டு கொள்வதும் இல்லை. மழை காலங்களில் மக்கள் அவதிப்படுவதை நேரில் பார்த்தால் நெஞ்சம் பதறும். ஒரு சாதா ரண பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு கூட இவர்களால் முடியவில்லை என்று நினைக்கும்போது மனம் வேதனைப்படுகிறது என்று கூறினார். 1970ல் கம்போங் பாரு ஜெலப்பாங் எனும் புறம்போக்கு பகுதியில் வசித்து வந்த 112 இந்தியக் குடும்பங்களுக்கு இதே இடத்தில் நிலம் கொடுப்பதாக வும் இங்கு அடிப்படை வசதி களை மேம்படுத்துவதாகவும் கூறி எங்களை வெளியேற்றினர். சுமார் 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எங்களுக்கு ஆக கடைசியாக வீடுகள் கட்டித் தருவதாக கூறி வேலைகள் நடந்தன. ஆனால், இன்று அந்த பணியும் முடங்கிக் கிடக்கிறது என்று சரஸ்வதி ராமையா (வயது 62) வேதனையுடன் கூறினார். 7.5 ஏக்கர் நிலப் பரப்பை மேம்படுத்துவதாகக் கூறி 1500 முதல் 2000 வெள்ளி வரை பெற்றுக் கொண்டனர். ஆனால், இத்திட்டம் முழுமை பெறுவதில் தாமதம் ஏற்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். முதலில் லாட் கொடுப்பதாக கூறினார்கள் பிறகு அனைவருக் கும் லாட் கிடைக்காது என்பதால் வெ.73 ஆயிரம் வெ.85 ஆயிரம் விலை நிர்ணயம் செய்து வீடுகள் கட்டப்படும் என்று கூறினார்கள். எப்படியோ ஒரு வீடு கிடைத்தால் போதும் என்ற ஆர்வத்தில் பணமும் செலுத்தினோம். ஆனால், இந்த திட்டம் தோல்வி பெறும் என்ற கவலையில் மூழ்கியுள்ளோம் என்று ஜெயமணி கிருஷ்ணன் (வயது 46) கூறினார். இந்த வயதான காலத்தில் எங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பையும் இழந்து விடு வோமோ என்ற கவலை எங்களை ஆட்டிப் படைக்கிறது என சரஸ் ராமையா (வயது 58) கூறினார். ஜெலப்பாங்கில் இருப்பது ஒரே ஒரு பொது மண்டபம்தான். டேவான் ஓராங்ராமாய் எனும் மண்டபம் முறையாக பராமரிப்பது இல்லை. பொது நிகழ்ச்சி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இம்மண்டபத் தைத்தான் நாங்கள் பயன்படுத்த வேண்டும். இம்மண்டபத்தின் நிலை மிக பரிதாபமாக இருக் கிறது. புறாக்களின் எச்சம் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. பழுதடைந்த மண்டப கூரைப் பகுதி பழுது பார்க்கப்படுவதில்லை. ஈப்போ மாநகர் மன்றம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என்று நா.சண்முகம் கூறினார். ஜெலப்பாங் தம் பாஹான் எனும் குடி யிருப்புப் பகுதியில் 226 குடும்பங்கள் வாழ்கின்றன. 2000ஆம் ஆண்டில் இங்குள்ளவர்களுக்கு நிலப்பட்டா வழங் கப்பட்டது. இங்கு 2.08 ஏக்கர் நிலப்பரப்பில் மைதானம் ஒன்றையும் அரசு வழங்கியிருக் கிறது என்றாலும் இதனை முறையாக பராமரிப்பது இல்லை. திடலை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஜெலப்பாங்கில் ஒரு தமிழ்ப்பள்ளி வேண்டும் என்ற தீர்மானம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழியப்பட்டது. ஆனால், அரசியல் தலைவர்கள் இதற்கான நடவடிக்கை எடுத்தார்களா? என்பது கேள்விக்குறிதான். ஜெலப்பாங் தம்பாஹான் பகுதியில் உள்ள திடலுக்கு அருகில் நிலம் ஒன்று அடையாளம் காணப்பட்டது. இங்கு தமிழ்ப்பள்ளி கட்டப்பட்டால் இங்குள்ள மைதானம் ஏற்புடையதாக இருக்கும் என்று கருதப் பட்டது. ஆனால், தொடர் நடவடிக்கை இல்லை. சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்கின்ற இப்பகுதியில் ஒரு புதிய தமிழ்ப்பள்ளி அமைந்தால் நிச்சயமாக மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தற்போது இங்குள்ளவர்களில் ஒரு பகுதியினர் தங்களின் பிள்ளைகளை சீன, மலாய் பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஜெலப்பாங் இந்தியர்கள் இங்கு தமிழ்ப்பள்ளி வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு செவிசாய்க் குமா? என்று எஸ்.தினகரன் கூறினார். ஜெலப்பாங் பகுதியில் பெரிய ஆலயமாக உருவெடுத்து வரும் டத்தோ அமாட் சைட் பகுதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு நிதி பற்றாக் குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தை மூன்று முறை சந் தித்து மனு கொடுத் தும் இது நாள் வரையில் எந்த ஒரு பதிலும் சொல்லா மல் மௌனம் சாதிக்கிறார். இது எங்களுக்கு பெரும் மன கஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று ஆலயத் தலைவர் வ.சோமசேகரன் (வயது 56) கூறினார். ஆலய கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில் ஜெலப் பாங் இந்தியர்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று மு.அண்ணாமலை (வயது 68) கூறினார். சுமார் 70 வருட காலமாக இங்கு செயல்பட்டு வரும் மார்க்கெட் பழுதடைந்துள்ள நிலையில் இங்கு மிக மோசமான வாகன நெரிசல் ஏற்படுவது கவனிக் கப்பட வேண்டும் என்று க.வீரைய்யா (வயது 76) கூறினார். இருவழி பாதையை ஒரு வழி பாதையாக மாற்றக் கோரி புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. மேலும் கடுமையான மழைக் காலங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. ஈப்போ மாநகர் மன்றத்தின் சேவை மன நிறைவை தரவில்லை. ஜெலப்பாங் பகுதியில் தூய்மைக்கேடு, குப்பைகள் அகற்றுவதில் அலட்சியம், முறையான சாலை பாதுகாப்பு இல்லாதது, விபத்து மரண சம்பவங்கள் அதிகரிக் கின்றன என்று கூறினார். சுமார் 23 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட ஜெலப்பாங் சட்டமன்றத்தில் ஏழாயிரம் இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதி பல வருடமாக எதிர்க்கட்சி வசமிருப்பதால் இங்கு அரசு எந்த ஒரு மேம்பாட்டுத் திட்டத்தையும் மேற்கொண்டது கிடையாது. மேலும் மக்களின் குறைபாடு களையும் யாரும் கண்டு கொள்வதாக இல்லை. மக்கள் பிரதிநிதிகளை வாக்கு சேர்க்கும் போது பார்த்ததுதான் அதன் பிறகு இங்குள்ள மக்களை சந்திக்க வருவதில்லை. மொத்தத்தில் ஜெலப்பாங் இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டுள் ளனர் என்றே கருதத் தோன்றுகிறது என்று மா.நடராஜா கூறினார். 2013 பொதுத் தேர்தலில் ஜெலப்பாங் சட்டமன்ற தொகுதிக்கு முதல் முறையாக மஇகா பிரதிநிதி தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டார். முதல் முறையாக இத்தொகுதியில் போட்டியிட்டாலும் கணிசமான வாக்குகள் கிடைத்தன. சீனர்கள் அதிகம் வாழும் இத்தொகுதி யில் இந்திய வேட்பாளர் ஒருவருக்கு நான்காயிரம் வாக்குகள் கிடைத் திருக்கின்றன என்றால் இத்தொகுதியில் சேவை அளவை கூட்டினால் நிச்சயம் தேசிய முன்னணி வெற்றி பெற வாய்ப்புண்டு என்று கூறினார். ஜெலப்பாங் சட்டமன்ற தொகுதி மக் களுக்கு நிறை வான சேவையை வழங்க இங்கு மக்கள் சேவை மையம் ஒன்றை உருவாக்க வேண் டும் என்று தின கரன் வேண்டு கோள் விடுத்தார். இச்சேவை மையத்தின் மூலம் மக்க ளுக்கு முழு நேர சேவை வழங்க முடியும் என்று கூறினார். இங்குள்ள மேருவின் நிலப் பிரச்சினையில் ஒரு சில குடும்பங்கள் விடு பட்டிருப்பது குறித்து ஆ.காளியப்பன் (வயது 60) கேள்வி எழுப்பினார். இந்நிலத் திட்டத்தில் தம்முடைய பெயர் விடுபட்டிருப் பது குறித்து கவலை தெரிவித்தார். இப்பகுதியில் நான் வாழ்ந்ததற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளன. இதனை நில அலுவலகத்தில் சமர்ப்பித் திருப்பதாக கூறினார். ஜெலப்பாங் இந்தியர்கள் இழந்துள்ள சலுகைகள் அடிப்படையில் அவர்கள் எதிர்பார்ப்புகள் பற்றி மாநில அரசின் கவனத்திற்கு இந்தியர்கள் பிரதிநிதி என்று மார்த்தட்டும் மஇகா கொண்டு செல்லுமா? என்ற கேள்விக் குறியோடு மக்கள் தங்களின் உள்ளக் குமுறலை முன் வைத்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img