img
img

87 ஆண்டுகால பழைமை வாய்ந்த கோயில் இடித்து தரைமட்டம்
வெள்ளி 14 ஜூலை 2017 13:02:13

img

(கே.வி.சுதன்) கிள்ளான், இங்கு ஜாலான் போர்ட்கிள்ளான், ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் பின்புறம் உள்ள 87 ஆண்டு கால பழைமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. நிலத்தின் உரிமையாளர் உட்பட அமலாக்க அதிகாரிகள், போலீசார், ஷா ஆலம் நீதிமன்றப் பொறுப்பாளர்கள் ஆகியோரின் முன்னிலையில் மண்வாரி இயந்திரத்தால் அந்த ஆலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கிள்ளான், லோரோங் பொக்கோ சாக்காட் சாலையில் தனியார் நிலத்தில் கட்டப்பட்டிருந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் நேற்று காலை 10.00 மணி யளவில் உடைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் உட்பட அமலாக்க அதிகாரிகள், போலீசார், மாவட்ட நில அதிகாரி, ஷா ஆலம் நீதிமன்றப் பொறுப்பாளர் ஆகி யோரின் முன்னிலையில் மண்வாரி இயந்திரத்தின் துணையுடன் ஆலயத்தை உடைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது பொது மக்கள் உட்பட யாரும் உதவ முன்வரவில்லை என்று சம்பந்தப் பட்ட ஆலயப் பொறுப்பாளர் தர்மா வருத்தத்துடன் கூறினார். சம்பந்தப்பட்ட ஆலயம் கட்டப்பட்டுள்ள நிலம் ஒரு சீனக் குடும்பத்திற்குச் சொந்தமானது. இந்நிலையில், பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்குப் பின் நில உரிமையாளர் இறுதியாக 9 லட்சம் வெள்ளிக்கு அந்நிலத்தை சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்திடம் விற்பதற்கு ஒப்புக் கொண்டிருந்ததாகக் கூறப் படுகிறது. இருப்பினும், அந்தத் தொகையைச் செலுத்துவதற்கான கால அவகாசம் முடிவடையும் தறுவாயில் இருந்ததால், தொடர்ந்து எதற்கும் காத்திருக் காமல் நில உரிமையாளர் ஆலயத்தைத் உடைத்துத் தரைமட்டமாக்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img