சிங்கப்பூர், ஒரு மலேசியப் பிரஜையான பிரபாகரனின் தூக்குத் தண்டனையை ஒத்திவைக்கக் கோரி, அவரின் குடும்பத்தினரும் மனித உரிமை அமைப்புகளும் முழு வீச்சாக நடத்திய கடைசி நேர சட்டப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. அவருக்கு தூக்குத்தண்டனை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் 6 மணிக்கு சாங்கி சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கும் நம்பிக்கைக்கும் இதுவே கடைசி வழியாக இருந்தது என்று சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய வழக்கறிஞர் சுரேந்திரன் தெரிவித்தார். பிரபாகரன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை எதிர்த்து அந்த வழக்கை நெதர்லாந்தில் தி ஹெக் நகரில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல அவரின் குடும்பத்தினர் கடந்த ஓராண்டு காலமாக போராடி வந்தனர். தனது 17 வயதில் தந்தையை இழந்த பிரபாகரன், தாயார் ஈஸ்வரியின் பராமரிப் பில்தான் ஜொகூரில் வாழ்ந்து வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு இவருக்கு எதிராக சிங்கப்பூர் போலீசார் கொண்டு வந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடைசி வரையில் தாம் ஒரு நிர பராதி என்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய நபர்கள் சாட்சியாக அழைக்கப்படவில்லை என்றும் 30 வயதான பிரபாகரன் வாதிட்டு வந்தார். இதன் காரணமாகவே சிங்கப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த தூக்குத் தண்டனையை எதிர்த்து இவ்வழக்கை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல் வதென அவரின் தாயார் ஈஸ்வரி சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். இவ்வழக்கை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுவதற்கு அனுமதி கோரி பிரபாகரனின் தாயார் ஈஸ்வரி செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கு மனு இன்னமும் மலேசிய நீதிமன்றத்தில் இருக்கும் போது விசா ரணை முடிவு தெரியும் வரையில் தன் மகனின் தூக்குத்தண்டனை ஒத்திவைக்க கோரி கடைசி நிமிடம் வரையில் ஈஸ்வரி போராடி வந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்