img
img

நிம்மதியே உன் விலை என்ன?
வெள்ளி 14 ஜூலை 2017 11:52:20

img

( பி.எம். குணா) கோலசிலாங்கூர், தண்ணீர் கட்டணம் 36 வெள்ளியைக் கட்ட முடியவில்லை என்பதற்காக குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இந்த வறட்சி காலத்திலும் மழை நீரை நம்பியிருக்கும் நிலை. தந்தை இல்லை. வறுமையில் உழலும் ஓர் இந்திய குடும்பம். பேரக் குழந்தைகளுக்கு பிறப்புப்பத்திரம் உள்ளது. ஆனால் தந்தையின் பெயர் விடுபட்டுள்ளது. அடிப்படை வசதியின்றி வாழும் இந்த ஏழை குடும்பம் ஒவ் வொரு நாளும் துயரத்தை எதிர்நோக்கி வருகின்றது. 1 முதல் 9 வயதில் உள்ள குழந்தைகளுக்கு தரமான சாப்பாடு இல்லாததால் ஊட்டச்சத்து இழந்து காணப்படுகின்றனர். மாவுபால் வாங்குவதற்குக்கூட வழியின்றி காணப்படும் இந்த குடும்பத்திற்கு பல்வேறு வழிகளில் உதவ யாரும் முன்வருவார் களா ? பரம்பரை பரம்பரையாக நண்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த குடும்பங்கள் வயிற்றுப் பிழைப்பென நம்பியிருந்த அத்தொழில் தற்சமயம் கைகொடுக்கவில்லை. இங்கு நண்டு பிடிக்கும் தொழிலையே நம்பியிருந்த ஒரு குடும்பம், அண்மைக்காலமாக ஆமை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவது போதுமான வரு மானம் கிடைக்காமல் வறு மையில் உழன்று வருவது மலே சிய நண்பனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. நண்டு பிடிக்கும் தொழிலை மலாய்க்காரர்களும், சீனர்களும் இந்த வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதால் பரம்பரை பரம்பரையாக அதில் ஈடுபட்டு வந்த இந்தியர்கள் வசதியற்ற நிலையில் அத் தொழிலை மற்ற இனங்களுடன் தொழில் போட்டியில் ஈடுபட வேண்டியுள்ளது. மேலும், கோல சிலாங்கூரில் நண்டு பிடிப்பதற்கு போர்ட் கிள்ளானிலிருந்து இந்தியக் குடும்பங்கள் வருவது தொழில் போட்டியை மேலும் கடுமை யாக்கியுள்ளது. வெளி நாட்டிலிருந்து நண்டு இறக்குமதி செய்வது இவர்களின் தொழிலை பாதித்துள்ளது. காண்டா நண்டுகள் அரிதாகி விட்டாலும் நண்டுகள் மவுசு சதுப்பு காடுகள் சூழ்ந்த இந்த வட்டாரத்தில் இன்னும் குறைய வில்லை. காண்டா நண்டு பிடிப் பதில் இந்தியர்களே கைத்தேர்ந்த வர்களாக விளங்கிய காலம் ஒன்று இருந்தது. ஆனால், நண்டு பிடிப் பவர்கள் தற்போது சீனர்களிடம் வேலை செய்ய வேண்டியுள்ளது. வாழ்க்கையில் இன்னும் பின் தங்கியுள்ள அக்குடும்பங்கள் நண்டு பிடிக்கும் தொழிலை கைவிட்டு விட்டன. இங்கு அசாம் ஜாவா அருகே ஜாலான் கிரெத் தாப்பி லாமாவில் மழை நீரை நம்பி காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் கன்னியம்மா சின்னப்பனின் (வயது 48) கதை மிகவும் துயரமானது. பரம்பரை பரம்பரையாக நண்டு பிடிக்கும் தொழிலையே நம்பியிருந்த 4 பிள்ளைகளைக் கொண்ட அக்குடும்பம் கழிப்பறையும், குளியளறையும் இல்லாத வீட்டில் காலம் தள்ளிக் கொண்டிருப்பது இன்னும் சோகமானது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img