img
img

வெடிகுண்டு வைக்கத் தூண்டிய ஒரு காதல் கதை
புதன் 12 ஜூலை 2017 16:44:25

img

கிள்ளான், ஒரு காதல் கதையின் முடிவே ஒரு குற்றவாளி உருவாவதற்கு தொடக்கமாக அமைந்தது. தனது முன்னாள் காதலியின் காரில் வெடிகுண்டை வைக்கும் அளவிற்கு ஓர் ஆடவன் துணிந்து விட்டான் என்றால் அவனது விரக்தியின் எல்லை எந்த அளவு என்பது நமது கற்பனைக்கு எட்டிய விஷயம்தான். சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் மற்றும் வெடிகுண்டு வைக்கப்பட்ட காரின் உரிமையாளரான அந்த பெண்ணின் விவரங்களை போலீசார் ரகசியமாக வைத் துள்ளனர். இருந்தாலும், அவர்கள் இருவரும் காதலர்கள் என்பதன் அடிப்படையிலும் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது என்பதன் அடிப் படையிலும் சிலாங்கூர் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தன் முன்னாள் காதலிக்கு வெடிகுண்டு வைக்க நினைத்த அந்த இந்திய ஆடவர் தற்போது நான்கு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.கிள்ளான், காப்பாரில் இன்று இதுதான் பேச்சாக இருக்கின்றது. ஒரு தாதியாக பணியாற்றும் தன் காதலி தன்னை வெறுத்து ஒதுக்கியதால் ஏமாற்றமும், ஆத்திரமும் அடைந்த ஆடவர் காரில் வெடிகுண்டு வைக்கும் செயலில் ஈடுபட்டதாக போலீசார் கூறியுள்ளனர். அது மட்டுமல்ல, தனது காதலி ஓட்டும் அந்த புரோட்டோன் சாகா ரகக் காருக்கு தவணை முறை பணம் செலுத்தப்படுவதாகவும், அதற்கு உத்தரவாதக் கையெழுத்தை தாம் போட்டிருப்பதால் தான் பல தொல்லைகளை எதிர்நோக்கியதாகவும், இதனால் விரக்தியடைந்து தாம் இச்செயலில் ஈடுபட்டதாகவும் சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் போலீஸ் வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறார். தான் சந்தேகப்படுவது தனது முன்னாள் காதலனை என்று அப்பெண் போலீஸ் புகாரில் கூறியிருந்ததை அடுத்து, கிள்ளான் தாமான் பெட்டாலிங் இண் டாவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் அந்த காதலன் கைது செய்யப்பட்டார். வீட்டினுள் நுழைந்த போலீசா ருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பட்டாசு வெடிமருந்துடன் மற்ற வகையான மின்னியல் பொருட்களையும் அவர்கள் கண்டெடுத்தனர். அந்த 28 வயது சந்தேகப் பேர்வழி ஒரு தனியார் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்றும் 2006-இல் அங்கு மின்னியல் துறையில் கல்வி கற்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். மின் பொருள் நிறுவனம் ஒன்றில் விற்பனை முகவராகவும் அவர் பணியாற்றியிருக்கின்றார். சம்பந்தப்பட்ட அந்த தாதி தனது முன்னாள் காதலி என்பதை போலீசாரிடம் அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார். தங்களுக்கிடையே பணப்பிரச்சினை இருந் ததாகவும் அவர் தெரிவித்ததாக சிலாங்கூர் குற்றப்புலனாய்வு இலாகாவின் தலைவர் மூத்த உதவி ஆணையர் ஃபாட்ஸில் அஹ்மட் கூறினார். கல்லூரியில் தான் கற்ற கல்வியை வெடிகுண்டு தயாரிப்பதற்கு அவர் பயன்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்த ஆடவர் மீது போதைப்பொருள் மற்றும் அச்சுறுத்திய இரு குற்றச்சாட்டுக்கள் ஏற்கெனவே பதிவாகியிருப்பதாகவும் சொன்னார். கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில், குறிப்பிட்ட அந்த பெண் காப்பாரில் தனியார் கிளினிக் ஒன்றில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது காரி லிருந்து ஒரு வித சத்தம் வருவதை அறிந்து தன் மாமாவிடம் தெரிவிக்க, காரை பரிசோதனை செய்ததில் சொந்தமாக செய்யப்பட்ட ஒரு வெடிகுண்டு காருக்கடியில் பொருத்தப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார். பிறகு போலீசில் இது பற்றி புகார் செய்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img