(பார்த்திபன் நாகராஜன் / எஸ். டவினா) ஜிஞ்சாங், தடுப்புக் காவலில் நிகழ்ந்து வரும் மரணச் சம்பவங்களுக்கு தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் உடனடியாக தீர்வு காண வேண் டும் இல்லையென்றால் பதவி விலக வேண்டும் என்று சுவாராம் இயக்குநர் செவன் துரைசாமி நேற்று வலியுறுத்தினார். ஜிஞ்சாங் உத்தாரா, நீண்ட வீடமைப்புப் பகுதியைச் சேர்ந்த பெனடிக் த/பெ தனிலாஸ் (வயது 44) கைது செய்யப்பட்டு ஜிஞ் சாங் காவல் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். சுமார் 13 நாட்கள் தடுப்புக் காவலில் இருந்த பெனடிக் உடல் நலக் குறைவால் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு வழங்கப் பட்ட சிகிச்சைகள் பலனளிக்கா மல் நேற்று முன்தினம் மரணமடைந்தார். பெனடிக் மரணம் குறித்து அவரின் மனைவி ஜானகி த/பெ நடராஜன் மருத்துவரிடம் வின வினார். அதற்கு மருத்துவர் மூச்சுத் திணறல் காரணமாக தான் பெனடிக் மரணமடைந்தார் என கூறியிருக்கிறார். பெனடிக்கிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட் டிருந்தது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது பெனடிக்கிற்கு என்ன நிகழ்ந்தது என்று அவ ரின் குடும்பத்தாருக்கு தெரியவில்லை.ஆனால் பெனடிக்கின் மரணத் தில் ஏதோ சூழ்ச்சி நிகழ்ந்திருக் கிறது என்பதில் மட்டும் அவரின் மனைவி ஜானகி உறுதியாக இருக்கிறார். இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்திலும் ஜானகி புகார் செய்துள்ளார் என்று செவன் துரைசாமி கூறினார். தடுப்புக் காவலில் பெனடிக் மரணமடைந்தது போல் பல சம்பவங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன.இச்சம்பவங்களுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக் கப்படாத தால் இதுபோன்ற மரணங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.ஆகவே தடுப்புக் காவல் மரணங்கள் விவகாரங்களுக்கு டான்ஸ்ரீ காலிட் உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையென் றால் பதவி விலக வேண்டும் என்று செவன் துரைசாமி செய்தியாளர்களிடம் கூறினார். இதனிடையே பெனடிக்கிற்கு திருமணமாகி ஐந்து பிள்ளைகள் உள்ளனர். கடைசி மகளுக்கு 1 வயது தான் ஆகிறது. இந்நிலையில் சந்தேகத்தின் அடிப் படையில் அழைத்து செல்லப்பட்ட பெனடிக் திடீரென மரணமடைந்துள்ளார். இனி பெனடிக்கின் மனைவி, ஐந்து பிள்ளைகளின் எதிர்காலத் திற்கு போலீஸ்படை பதில் சொல்லுமா என்று பெர்மாஸ் இயக்கத்தின் தலைவர் எம். ஆறுமுகம் நேற்று கேள்வி எழுப்பினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்