img
img

சிப்பாங் மாவட்ட இந்தியர்களுக்கு கொட்டிக் கிடக்கும் பிரச்சினைகள்.
புதன் 12 ஜூலை 2017 12:59:32

img

சிப்பாங், ஒரு காலத்தில் கோல லங்காட் மாவட்டத்தில் முக்கிம் சிப்பாங், முக்கிம் லாபு,முக்கிம் டிங்கில் ஒன்றிணைக்கப் பட்டிருந்த முக்கிம் சிப்பாங் 1975ஆம் ஆண்டு சிப்பாங் மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது அதன் நிர்வாகங்கள் யாவும் சிப்பாங் நகரில் உள்ள அலுவலகத்திலிருந்து செயல்பட துவங்கியது என்றாலும் சிப்பாங் மாவட்டத்தில் பன்னாட்டு விமான நிலையம் கட்டப்பட்டபோது ஏர் போர்ட் சிட்டி என அழைக்கப்பட்ட பண்டார் பாரு சாலாக் திங்கி எனும் பகுதிக்கு 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதியன்று சிப்பாங் மாவட்டத்தின் அலுவலகம் மாற்றம் கண்டது. சிப்பாங் மாவட்டத்தில் வாழ்ந்துவரும் பல்லின மக்களின் விகிதாச்சாரப்படி முதல் இடத்தில் மலாய்க்காரர்களும் (68%), இரண்டாவது இடத்தில் இந்தியர்களும் (19 %), மூன்றாவது இடத்தில் சீனர்களும் (12%) மற்ற இனத்தவர்கள் 1 % ஆகியோர் உள்ளனர். சிலாங்கூர் மாநிலத்தில் அதிகமான இந்தியர்கள் வாழ்ந்துவரும் மாவட்டங்களில் ஒன்றான சிப்பாங் மாவட்டத்தில் அன்று அதிகமான தோட்டங்கள் இருந்து வந்தன. குறிப் பாக இங்குள்ள சுங்கை பீலேக் பகுதியில் தும்போக் தோட்டம், சுங்கை ரவாங் தோட்டம், பங்களா மங்கீஸ் தோட்டம், பெர்மனாக், சுங்கை லீனாவ், சிப்பாங் தோட்டம், பியூட் ஆகிய தோட்டங்களும் பண்டார் பாரு சாலாக் திங்கி பகுதியில் பூத்தான் தோட்டம், டிங்கில் பகுதியில் காலவே, அம்பர்தெனாங், மெடிங்கிலி, பிராங் பெசார், சிட்ஜிலி ஆகியவை இருந்தன. இத்தோட்டங்களில் வேலை செய்துவந்த தொழிலாளர்களுக்கு தோட்டங்கள் மேம்பாட் டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்போது அதன் ஒரு சில நிறுவனங்கள் சொந்த வீடமைப்புத் திட்டங்களை உருவாக்கி தருவதற்கு பதிலாக இழப்பீட்டுத் தொகையினை மட்டும் கொடுத்து அவர்களை கை கழுவிவிட்டன. இவர் களில் குறிப்பாக சுங்கை பீலேக் பகுதியில் உள்ள தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் தொழிலாளர்களுக்கு அன்றைய சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் (தே.மு) தலையீட்டின்வழி தெலுக் மெர்பாவில் தாமான் தெலுக் மெர்பாவ் என்ற தோட்டத் தொழிலாளர் வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது என்றாலும் இங்குள்ள பியூட் தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த வாய்ப்புகள் இன்றுவரை கிடைத்தபாடில்லை. டிங்கில் பகுதியில் உள்ள காலவே, பிராங் பெசார், மெடிங்கிலி, சிட்ஜிலி, ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு குடியமர்த்தப்பட்டனர் என்றாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு அம்பர்தெனாங் தோட்டத்தில் தரை வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில் அத்திட்டம் இன்னும் தொடங்கப்படாமல் இருந்து வருவது தொடர்பில் பலரும் பல தரப்பட்ட சந்தேக கேள்விகளை தொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அம்பர்தெனாங் தோட்ட முன்னாள் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட வேண்டு மெனக்கோரி மூன்று மாதங் களுக்கு முன்னர் இத்தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் பயனாக தோட்ட நிறுவனமான சைம் டார்பி நிறுவனம் முன்னூறு வீடுகளை கட்டிக்கொடுப்பதாக அறிவித்துள்ளது. மேலும் பூத்தான் தோட்ட தொழிலாளர்களுக்கு பண்டார் பாரு சாலாக் திங்கியில் மலிவு விலை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இப்படி சில தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றாலும் சுங்கை பீலேக் பகுதியில் முன் பிருந்த தோட்டங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலருக்கு சொந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்படாததால் அவர்கள் இன்றும் வாடகை வீடு களில் தங்களின் காலத்தை கழித்து வருவதாக இப்பகுதியைச் சேர்ந்த பலர் நண்பனிடம் தகவல் கூறினர். சிப்பாங் மாவட்டத்தில் பல பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும் அங்கு கட்டப்படும் அதிக விலை யிலான வீடுகளை வாங்கும் சக்தியினை வீடுகள் இல்லாமல் தவித்துவரும் இப்பகுதியை சேர்ந்த முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் கொண்டிராததால் பன்னாட்டு விமான நிலையத்தைப் பெற்றிருக்கும் சிப்பாங் மாவட்டத்தில் வாங்கும் சக்திகொண்ட மலிவு விலையிலான வீடுகளை சிலாங்கூர் அல்லது மத்திய அரசாங்கம் கட்ட வேண்டும் என அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர். அனைத்துலக ரீதியில் சிப்பாங் மாவட்டம் அறிமுகமாகியுள்ளதன் காரணமாக இங்கு அதிகமான இந்தியர்கள் வீடுகளை வாங்கி குடியேறி வருகின்றனர். குறிப்பாக இங்கு சுங்கை பீலேக் பகுதியில் உள்ள பாகான் லாலாங் கடற்கரையை ஒட்டியுள்ள பந்தாய் சிப்பாங் புத்ராவில் அதிகமான இந்தியர்கள் வீடுகளை வாங்கியுள்ளனர். தவிர துரித வளர்ச்சியடைந்துவரும் சிப்பாங் மாவட்டத்தில் இந்தியர்களுக்கென மின் சுடலையொன்றும் இல்லாததினால் இவ்வட்டார மக்கள் தகன காரியங்களை செய்வதற்கு வெகு தூரத்திற்கு செல்ல வேண்டியிருப்பதாக இங்கு சிப்பாங்கைச் சேர்ந்த க.படுதேவன், நல்லத்தம்பி என்ற மணி, மு.ராம நாதன், ர.சரவணன், ஆகியோர் கருத்துரைத்தனர். இங்கு சிப்பாங் - சாலாக் செல்லும் சாலையில் ஆவடையார் கோயிலுக்கு எதிரில் உள்ள இந்து இடு காட்டை சிப்பாங் நகராண்மை கழக உறுப்பினரான பெ.சிவக்குமார் என்பவர் தனது முயற்சியின் வாயிலாக சிப்பாங் நகராண்மை கழகத்தின் மூலம் நிதியினைப்பெற்று இங்குள்ள சாலைகளை செப்பனிட்ட துடன் அங்கு அமர்ந்து பேசக்கூடிய நேர்த்தியான கொட்டகை உட்பட பல வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளார். எனினும் இங்கு தகனம் செய்வதற்கு நேர்த்தி யான வகையில் வசதிகள் இல்லை என்பதால் மரக்கட்டைகளை கொண்டு இறுதிக் காரியங்களை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே இங்கு அரசாங்கம் மின் சுடலையொன்றை நிர்மாணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். அரசாங்கத்தின் மூலமாக கட்டப்படும் மின்சுடலையினை வசதி குறைந்தோறும் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய அளவிற்கு அதன் கட்டணம் அமைந் திருப்பதுடன் அதனை பராமரிக்கும் பொறுப்பும் அரசுடையதாக இருக்க வேண் டும் என மேலும் ஆலோசனை தெரிவித்தனர். ஒரு காலத்தில் சிப்பாங் ம.இ.கா. இரண்டு மேலவை உறுப் பினர்களை கொண்டி ருந்ததுடன் அன்றைய ம.இ.கா தேசியத் தலைவர்களுடன் நல்ல நட் புறவை கொண்டிருந்தவர்கள் இங்கு வாழ்ந்துவரும் இந்தியர்களுக்காக அல்லது எதிர்காலத்தில் நமது பெயர் விளங்கும் வகையிலான பொது மண்ட பமொன்றை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்க முடியும். அன்று அவர்கள் இத்திட்டத்தை மேற்கொண்டிருப்பார்கள் என்றால் இன்று நமக்கென்று ஒரு பொது மண்டபம் நிலைபெற்று இருந்திருக்கும். சிப்பாங் மாவட்டம் என்றால் அதன் பெயரை தாங்கியுள்ள சிப்பாங் நகரையொட்டிய பகுதிகளில் குறைவான இந்தியர்கள் வாழ்ந்து வந்தாலும் பெரும் பான்மை இந்தியர்கள் வாழ்ந்துவரும் சுங்கை பீலேக் பகுதி அல்லது டிங்கில் பகுதியில் இந்தியர்களுக்கென ஒர் பொது மண்டபத்தை ஏற்படுத்தும் நடவடிக் கையை அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காமல் இந்தியர்கள் என்ற உணர்வோடு மட் டும் அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட் டவர்களின் பார்வைக்கு அல்லது கவனத்திற்கு முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என கா.கணேசன், ரா. வசந்தி, ஆர்.பரிமலாதேவி, பி.ராஜமாணிக்கம், கெ.தாமரை, பெ.சந்திரன், எஸ்.பிரபு ஆகியோர் வலியுறுத்தினர். சிப்பாங் மாவட்டத்தில் உள்ள இந்திய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் திருமணம் அல்லது விருந்து என்றால் சீனர்களின் கைவசத்தில் அதிக வாடகை கட்டணத்தில் வழங்கக்கூடிய திறந்தவெளி மண்டபத்தை நாட வேண்டியுள்ளது. இப்பகுதிகளில் வாழ்ந்துவரும் பெரும்பாலோர் தோட்டப் புறங்களில் வாழ்ந்தவர்கள் (வாழ்பவர்கள்) என்பதால் நமக்கென உள்ள பொது மண்டபம் குறைந்த விலையில் கிடைப்பதை எதிர்ப்பார்க்க முடியும் என்பது ஒருபுறமிருக்க நமது மண்டபம் என்ற தெம்புடன் நெஞ்சுயர்த்த முடியும் என எதார்த்தத்துடனும், ஏக்கத்துடனும் கூறினர். நண்பனுக்கு கிடைத்த நம்பத் தகுந்த தகவலின்படி சிப்பாங் மாவட்டத்தில் பொது மருத்துவமனையொன்றை நிர்மாணிப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசாங்கம் இங்குள்ள பண்டார் பாரு சாலாக் திங்கியில் தாமான் சரோஜா எனும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் ஏறக்குறைய இருபது ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாகவும் அந்நிலம் இன்றும் எவ்வித மேம்பாடும் இன்றி காடுமண்டிக் கிடப்பதாக கூறப்படுகிறது. நிலம் ஒதுக் கப்பட்டிருந்தது உண்மையெனில் அதன் இன்றைய நிலைமை என்ன என்றும் மருத்துவமனைக் காக ஒதுக்கப் பட்ட நிலம் வேறு திட்டங் களுக்கு தாரை வார்க்கப்பட்டுவிட் டதா என்பதை அறிந்துக்கொள்ள அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதித்து அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆராய வேண்டும் என வலிறுத்தப்பட்டனர். இரு பன்னாட்டு விமான நிலையம் (கே.எல்.ஐ.ஏ), உல்லாச தளமான சிப்பாங் கோல்ட் கோஸ்ட், சுற்றுலா பயணிகளை கவர்ந்த பாகான் லாலாங் கடற்கரை என உலக சுற்றுப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் வளர்ச்சி கண்டுவரும் சிப்பாங் மாவட்டத்தில் வாழ்ந்துவரும் மக்களின் வசதிக்காக பொது மருத்துவமனை யொன்று இல்லை என்ற குறைபாடு இங்குள்ள இந்தியர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களுக்கும் பெரிய ஏமாற்றமாக உள்ளது. அதிலும் இங்குள்ள தோட்டப் புற சூழலைக்கொண்ட இந்திய சமூதாயத்தினர் பல்வேறு பொது மருத்துவமனை இல்லாததன் காரணத்தினால் பந்திங் அல்லது புத்ரா ஜெயா, சிரம்பான் போன்ற வெகு தூரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு அதிக செலவு செய்து செல்ல வேண்டியிருப்பதாக இப்பகுதி யைச் சேர்ந்த ஐ.சிவராஜா, மு.ராமநாதன், பெ.முனியாண்டி, காமராஜன், ரவீந்திரன், பன்னீர்செல்வம், லோகநாதன், சுப்ரமணியம், சரவணன், ஏ.அரு ளரசி, என்.பவாணி, ராமன்,என்.சசிதரன்,வி.ருக்குமணி, ஆகியோர் வேதனை தெரிவித்தனர் இது போன்ற வேளைகளின்போது குறைந்த கட்டணத்தில் பொது போக்குவரத்து பேருந்துகளை நாடுவதற்கும் வழியில்லை. அந்த வசதியும் இங்கு சிப் பாங் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டுவரும் பொது பேருந்துச் சேவையினை பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்றுவர இவ்வட்டார மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது என்றாலும் இப்பேருந்து சேவை இல்லாத இடங்களுக்கு செல்வதற்கான பொதுப்பேருந்து வசதியினை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். குறிப்பாக இங்கு சுங்கை பீலேக்கில் உள்ள சுகாதார கிளினிக்கிற்குச் செல்லும் நோயாளியின் நிலைமை மோசமாக இருக்கும் நிலையில் அவரை புத்ரா ஜெயா அல்லது வேறு அரசு பொது மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கான அம்புலன்ஸ் வசதிகள்கூட இங்கு பல வேளைகளில் இருப்ப தில்லை. இது தவிர சம்பந்தப்பட்ட நோயாளியை எக்ஸ்ரே செய்ய வேண்டுமெனில் அதற்குறிய கருவிகள் இங்கு சுங்கை பீலேக்கில் உள்ள கிளினிக்கில் கைவசம் இல்லாததால் நோயாளிகள் பெக்கான் சாலாக்கில் உள்ள சுகாதார கிளினிக்கிற்கு அனுப்பி வைக்கப்படுவர். எனினும் அங்குள்ள எக்ஸ்ரே கருவி பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது எனக்கூறும் அங்குள்ள மருத்துவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நோயாளியை புத்ரா ஜெயா மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறிவிடும் சூழ்நிலையில் நோயுற்ற நிலையில் இருக்கும் ஒருவர் உடல் அசைவுற்ற நிலையில் அங்குமிங்குமாக அலைகழிக்கப்பட்டு பின்னர் வெகு தூரத்தில் உள்ள புத்ரா ஜெயாவிற்கு செல்வதற்கு வழி தெரியாமலும் பொதுப் பேருந்து இல்லாததால் வாடகை வாகனங்களில் செல்வதற்கான பண வசதியில்லாமலும் வீடு திரும்பிவிடும் வேதனைக்குரிய சம்பவங்கள் இன்றும் நிகழ்ந்து வருகிறது. வாடகை வாகனங்களின் உதவியுடன் ஒவ்வொரு தடவையும் புத்ரா ஜெயா அல்லது சிரம்பான் பொது மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு அதிக செல விட வேண்டியிருப்பதை கருத்தில் கொண்டு பலர் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் நோயின் கொடுமையான தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர். சொந்த வாகனங்களை வைத்திருப்பபவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் வாடகை வாகனங்களின் உதவியை நாடுபவர்கள் மிகுந்த பொருளாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். அதிலும் வயது முதிர்ந்தவர்கள் எதிர்நோக்கிவரும் சிரமங்களை வார்த்தைகளால் சொல்லி மாலாது. எனவே இவ்வட்டார மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினையை மத்திய அரசாங்கம் சற்று மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டும். நோயின் தாக்குதலால் போராடி வருவோருக்கு தகுந்த வசதியினை ஏற்படுத்தக்கூடிய இவ்விவகாரத்தை அரசியல் நோக்குடன் பார்க்காமல் மனித நேயத்துடன் பார்க்க வேண்டும் என மு.ராமநாதன் ,காராக் மணியம், ஆர்.ராமன், ஆர்.ரவீந்திரன்.எம்.செல்வம், கே.சிவநேசன் ஆகியோர் வலியுறுத்தினர்.. நாட்டின் பல பகுதிகளில் பொது மருத்துவமனைகளை நிர்மாணித்துவரும் மத்திய அரசாங்கம் சிப்பாங் மாவட்டத்தில் நேர்த்தியான மருத்துவமனை யொன்றை கட்டிக்கொடுக்க வேண்டும். இந்நிலையில் தற்போது புத்ரா ஜெயாவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பொது மருத்துவமனையொன்று இருக்கும் நிலையில் அதன் அருகில் உள்ள சைபர் ஜெயாவில் பல கோடி வெள்ளி செலவிலான புதியதொரு மருத்துவமனையை அரசாங்கம் நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிப்பாங்கில் மருத்துவமனையொன்று வேண்டும் என பல காலமாக கோரிக்கை வைத்துவரும் எங்களை திரும்பிப்பார்க்க நாதியில்லை என வேதனை தெரிவித்த இவர்கள் இவ்விவகாரத்தை சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் தேசியத்தலைவருமான டத்தோஸ்ரீ. எஸ்.சுப்ரம ணியத்தின் பார்வைக்கு ம.இ.கா சிப்பாங் தொகுதித் தலைவர் வே.குணாளன் கொண்டு செல்வதுடன் நீண்ட கால இப்பிரச்சினைக்கு நல்ல தீர்வினை ஏற்படுத்த முயல வேண்டும் என கோரினர். நீண்ட காலமாக சிப்பாங் மாவட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் மேற்கண்ட அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் முனைப்புக் காட்ட வேண் டும். பொதுத் தேர்தல் காலங்களின்போது எங்களிடம் வாக்குக்கேட்டு வருபவர்கள் முதலில் நாங்கள் எதிர்நோக்கிவரும் முக்கிய முதல் மூன்று பிரச் சினைகளான பொது மருத்துவமனை, மின் சுடலை, பொதுப்பேருந்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்தனர். தஞ்ஜோங் சிப்பாட், சுங்கை பீலேக், டிங்கில் ஆகிய மூன்று முக்கிய தொகுதிகளில் வாழ்ந்துவரும் அதிகமான இந்தியர்கள் தங்களின் உறவுகளுக்கான கரு மக்கிரியைகளை செய்வதற்குறிய நேர்த்தியான நிரந்தரமான இட வசதியை பெற்றிருக்காததால் எவ்வித வசதியும் இல்லாத தஞ்ஜோங் ரூ, கடற் கரையில் காரியங்களை �

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img