புத்ராஜெயா, சட்டவிரோதத் தொழிலாளர்க ளுக்கு எதிராக குடிநுழைவு இலாகா நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவரை 3,014 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 57 முதலாளிகள் பிடிபட்டுள்ள அதே சமயம், 180 பேருக்கு காரணம் கோரும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சட்டவிரோதத் தொழிலாளர்கள் இ-கார் டுகளுக்காக விண்ணப்பம் செய்யும் அவகாசம் கடந்த ஜூன் மாத இறுதியில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இம்மாத தொடக்கத்தின் குடிநுழைவு இலாகா அதன் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியது. நாடு தழுவிய நிலையில் தாங்கள் இதுவரை 502 நடவடிக் கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், 9,320 பேர் சோதனை செய்யப்பட்டனர் என்றும் குடிநுழைவு துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி ஓர் அறிக்கை வாயிலாகக் கூறினார். கைது செய்யப்பட்ட மொத்த சட்டவிரோத குடியேற்றக்காரர்களில் மிக உயரிய எண்ணிக்கையாக 1,160 வங்காளதேசிகள் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து, இந்தோனேசியர்கள் (695), மியன்மார் (231), வியட்னாம் (116), தாய்லாந்து (111), பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 95 பேர் இவர்களில் அடங் குவர். தங்களின் இந்நடவடிக்கை தொடரும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்