(ஆறுமுகம் பெருமாள்) டிங்கில், இந்நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரதமர் உட்பட முன்னாள் பிரதமர்கள் செய்துள்ள சேவை யைக் காட்டிலும் தாம் அதிகமான உதவிகளை செய்து வருவதுடன் தம்முடைய இச்சேவை மேலும் தொடரும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார். நேற்று மாலை இங்குள்ள தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி யில் நடைபெற்ற மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் தோற்றுவிக்கப் பட்டு இருநூறு ஆண்டுகள் நிறை வடைந்ததை முன்னிட்டு நடை பெற்ற நிறைவு விழாவினை துவ க்கி வைத்தபோது அவர் இத் தகவலை கூறினார். 2010ஆம் ஆண்டு தாம் பிரதமராக பொறுப்பேற்றவுடன் இந்நாட் டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த பாடுபட்டதன் காரணமாக அதன் மேம் பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் இதுவரை 90 கோடி வெள்ளி மானியங்களை வழங்கியுள்ளதுடன் குறிப்பிட்ட அளவில் இருந்த தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக் கையை இன்று 524 பள்ளிகளாக அதிகரித்திருப் பதுடன் இதன் எண்ணிக்கை இவ்வாண்டு இறுதிக்குள் 600ஆக அதிகரிக்கும் என தெரிவித்தார். மலேசியாவில் உள்ள எல்லா மொழி பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் பிரதமர் என்ற வகையில் அனைத்தையும் செய்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், மலேசியர்கள் என்ற உணர்வுடன் எல்லா இனமும் ஒன்றுபட வேண்டும். எனவேதான் இந்நாட்டில் வாழ் ந்துவரும் எல்லா இனங்களின் மொழி, கலை, கலாச்சாரம் ஆகியவை நிலைத்திருப்பதற்கு அரசாங்கம் எல்லா வகையிலும் உத்தரவாதம் வழங்கியுள்ளது. முன்னதாக பேசிய பிரதமர் தற்போது தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளை அமைத்து வருவதுடன் இவ்வாண்டு கூடுதலாக மேலும் ஐம்பது பாலர் பள்ளி கள் நிறுவப்படும் என்பதுடன் இது நாட்டிலுள்ள எல்லா தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர் பள்ளிகள் இருப்பதை உறுதி செய்யும் என்பதோடு இந்திய சமுதாயத் தில் உயர்கல்வி கற்றவர்க ளின் எண்ணிக்கையை அதிகரிக் கும் வகையில் உயர்கல்வி கூடங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த் தவுள் ளதாக கூறினார். இந்திய சமுதாயத்தின் பலத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல கூறுகளாக பிரிந்து கிடக்கும் இந்திய சமுதாயம் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக இந்நாட் டில் இந்திய சமுதாயத்தினர் பலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.தாமான் பெர்மாத்தா தமிழ்ப் பள்ளியின் பொது மண்டப நிர்மாணிப்புக்கு பிரதமர் நஜீப் இர ண்டரை லட்சம் வெள்ளிக்கான காசோலையை பள்ளி வாரியக் குழுவிடம் வழங்கினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்