கோலாலம்பூர், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படுவதற்கு அட்டவணையிடப் பட்டுள்ள மலேசியப் பிரஜை எஸ். பிரபாக ரனின் தண்டனை நிறை வேற்றத்தை நிறுத்தும்படி அவரின் தாயார் ஈஸ்வரி சிங்கப்பூர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வழக்கு விசாரணையை நெதர்லாந்தில் தி ஹெக்கில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ள வேளையில் எதற்காக அவசரப்பட்டு என் மகனின் தண்டைனையை நிறைவேற்ற வேண்டும் என்று தாயார் ஈஸ்வரி கண்ணீர் மல்க கூறினார். 29 வயதுடைய பிரபாகரனுக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் வழக்கு நியாயமாக நடைபெறவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். எனவேதான் இந்த வழக்கை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு அவரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர் என்று ஈஸ்வரி சார்பில் ஆஜரா கியுள்ள வழக்கறிஞர் என். சுரேந்திரேன் தெரிவித்தார். பிரபாகரனின் வழக்கை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மலேசிய நீதிமன்றத்தில் செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கு மனு இன்னமும் நிலுவையில் இருக்கும் போது எதற்காக தண்டனையை நிறைவேற்றுவதில் சிங்கப்பூர் அவசரம் காட்ட வேண்டும் அவர் கேள்வி எழுப்பினார். இவ்வாறு அவசரம் காட்டுவது ஒருவரின் தனிப்பட்ட அடிப்படை உரிமையை மீறுவதற்கு ஒப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் நடைபெற்ற பிரபாகரனுக்கு எதிராக வழக்கு விசாரணையை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல சிங்கப்பூரை கட்டாயப்படுத்துமாறு மலேசியாவில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை மனுவை கடந்த மார்ச் மாதம் கோலாலம்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவ்வாறு உத்தரவு பிறப்பிப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அது காரணம் கூறியது. இந்நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து ஈஸ்வரி மேல்முறையீடு செய்துள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்