img
img

கட்டொழுங்கும் நேர்மையும்தான் சிறப்பு
புதன் 12 ஜூலை 2017 10:54:15

img

காவல்துறையில் நமது சமுதாய பெண்கள் கால்பதித்து சாதிக்க வேண்டுமென்றால் காவல்துறை மீது அவர்கள் கொண்டிருக்கும் தவறான கருத்துக்கள் அல்லது சிந்தனைகளிலிருந்து வெளிவர வேண்டும் எனக் கூறுகிறார், ஏஎஸ்பி அமுதா காளிமுத்து. பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தில் பொது அமைதி பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய அமுதா கடந்த மே 20ஆம் தேதி ஏஎஸ்பியாகப் பதவி யேற்றதோடு நம் பெண்களாலும் காவல் துறையில் தனி முத்திரை பதிக்க முடியும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார். கெடா, ஜித்ராவைச் சொந்த ஊராகக் கொண்டுள்ள ஏஎஸ்பி அமுதாவிற்குக் காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது சிறுவயது கனவல்ல, இலட் சியம். அந்த இலட்சி யத்தை அடைய வேண்டிய பயணத்தில் அவர் தன்னுடைய சிறுவயது முதற்கொண்டே வழிகளை முறையாக அமைத்துக் கொண் டார். அதற்கு அவரின் தந்தையும் அதிகளவில் ஊக்கம் கொடுத்து வந்தார். மலாயாப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் மற்றும் சமூக நீதித் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டி ருந்தாலும் கூட காவல்துறை யின் பால் அவர் கொண்டிருந்த ஆர்வத்தின் கனவு கொஞ்சமும் அணையாமல் இருந்தது. எனவே, ஓராண்டு காவல்துறை பயிற்சியை மேற்கொண்டு 2005ஆம் ஆண்டில் பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தில் விசாரணைப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கினார். பிறகு, 2008ஆம் ஆண்டு தொடங்கி பொது அமைதி பாதுகாப்புப் பிரிவில் தனது காவல்துறை பணியைத் தொடர்ந்தார். பல சவால்களையும் சிக்கல் களையும் கடந்து வெற்றி கண்டு இன்று ஏஎஸ்பி யாகப் பதவியேற்றம் பெற்றுள்ளார். இன்று அவர் தனது பணியில் சிறப்பாகச் செயலாற்ற அவருடைய கணவர் மிகவும் பக்கப் பலமாக இருந்து வருகிறார். காவல்துறையில் ஆண்கள் மட்டுமே பணியாற்றக் கூடிய பணி என்ற சிந்தனை மாற்றம் முதலில் நம் சமுதாயப் பெண்களிடையே ஏற்பட வேண்டும். இன்றைய காலக் கட்டத் தில் ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலுமே நம் பெண்கள் கோலோச்சத் தொடங்கி விட்டனர். ஆண்களுக்கு இணையாகத் தங்களுக்கென்று தனி அடையாளத்தையும் உருவாக்கிக்கொள்ள முனைந்துள்ளனர். அந்த வகையில், காவல்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உள்ளத்தில் ஆழமாக வேரூன்றினால் வெற்றிக்கான மார்க்கமும் தானாகவே புலப்படும் என ஏஎஸ்பி அமுதா பெண்களுக்கு ஆலோசனை வழங்கினார். அதிக சவால்களையுடைய இத்துறையில் தங்களின் பாதுகாப்பும் அழகும் பாதிக்கப்படும் என அச்சப்படும் பெண்களும் இருக்கின்றனர். ஆனால், இத் தகைய துறையில் நாம் சாதித்து பெறும் அடையாளமும் பெருமையுமே இந்தத் துறையில் நாம் அணியும் மிக முக்கியமான, அழகான அலங்காரமாகும். நம்முடைய கட்டொழுங்கும் நேர்மையும் இத்துறையின் சிறந்த அணிகலன்களாகும். இவையே மற்ற பெண்களைக் காட்டிலும் நம்மை ஓர் அங்குல மாவது வேறுபடுத்திக் காட்டும். எனவே, பெண்கள் அதிகளவில் காவல் துறையில் ஈடுபட அவர்களின் குடும்பத்தாரும் பெண்களை ஊக்குவிக்க வேண் டும். காவல்துறையில் பணியாற்ற நம் சமுதாயப் பெண்கள் முன்வர வேண்டும். எந்தத் தொழில் செய்தாலும் ஆர்வமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் தான் மிகவும் முக்கியம். பிறரிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும் தனித்துவம் இத்துறைக்கு இருப்பதால் பெண்கள் துணிந்து காவல்துறையில் பணியாற்றலாம் என ஊக்கம் தெரிவித்தார் ஏஎஸ்பி அமுதா.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img