ஆர்.ஓ.எஸ் உத்தரவின்படி, கட்சியின் மத்திய செயலவைக்கு மறுதேர்தலை நடத்தும் அவசியமேதும் இல்லை என்று ஜ.செ.க வாதாடும் அதே சமயம், ஆர்.ஓ.எஸ் உத்தரவை ஜ.செ.க பின்பற்றத் தவறினால் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை அக்கட்சி நியமனம் செய்ய முடி யாது என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அஹமட் ஜாஹிட் ஹமிடி நேற்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மத்திய செயலவைக்கு மறுதேர்தலை நடத்த வேண்டும் என்ற ஆர்.ஓ.எஸ்-சின் இந்த அறிவிப்பால் தாம் குழம்பிப்போயிருப்பதாக ஜ.செ.க தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். 2012இல் நடத்தப்பட்ட கட்சித் தேர்தலில் வாக்களிக்கும் அதிகாரம் பெற்ற சில பேராளர்கள் இன்று உயிருடன் இல்லை. அவர்களில் கட்சியின் முன்னாள் தலைவர் கர்ப்பால் சிங்கும் ஒருவர். அவர் இப்போது எங்களுடன் இல்லை. மறுதேர்தலுக்காக கர்ப்பாலை மீண் டும் இங்கு நாங்கள் கொண்டு வர வேண்டுமா என்று குவான் எங் வினவினார். நேற்று பினாங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குவான் எங் இக்கேள்வியினை எழுப்பினார். 2012-இல் நடைபெற்ற கட்சித் தேர்தலில் கலந்து கொண்ட பேராளர்களின் பட்டியலை மையமாக வைத்து மறுதேர்தலை நடத்துவது சாத்தியமாகாது. எனவே, இதுதான் எங்களுக்கு புரியவில்லை. இது அர்த்தமுள்ளதாகவும் தெரியவில்லை. அதனால்தான் இது எங்களுக்கு விநோதமான விவகாரமாக இருக்கிறது. காரணம், இது அர்த்தமே இல்லாத ஒன்று. இது புதிராக இருக்கின்றது என்று அவர் சொன்னார். இதனிடையே, ஆர்.ஓ.எஸ் உத்தரவை மீறினால் பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாது என்ற மற்றொரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் ஜாஹிட் ஹமிடி.கட்சியின் அதிகாரம் பெற்ற கட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே பொதுத்தேர்தல் வேட்பாளரின் நியமனக் கடிதத்தில் கையெழுத்திட முடியும் என்று 1966-ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச்சட்டம் வலியுறுத்துவதே இதற்கு காரணமாகும் என்று ஜாஹிட் விளக்கம் அளித்தார். உள்துறை அமைச்சருமான அவர் நேற்று கோம்பாக் அம்னோ தொகுதியின் ஆண்டுக்கூட்டத்தை தொடக்கி வைத்த பிறகு நிருபர்களிடம் இவ்விவரங் களைக் கூறினார். ஒரு வேட்பாளரை நியமனம் செய்யவிருக்கும் கட்சித் தலைவர்களின் அணியை ஆர்.ஓ.எஸ் அங்கீகரிக்கவில்லை என்றால், நியமனக் கடிதத்தை வழங்கவும் முடியாது; அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. எனவே, அக்கட்சியின் வேட்பாளர் போட்டியிட முடியாது என்றார் அவர். 2013 மத்திய செயலவை தேர்தல் செல்லாது என்று ஜ.செ.க-வை ஆர்.ஓ.எஸ் தண்டிப்பது ஒரு சாதாரண விஷயமல்ல என்று வழக்கறிஞர்கள் எச்சரித் துள்ளனர். மிகவும் மோசமான ஒரு சூழலில், ஆர்.ஓ.எஸ். உத்தரவை பின்பற்ற மறுத்தால் ஜ.செ.க பதிவு ரத்தாகலாமென்றும் பொதுத் தேர்தலில் ஜ.செ.க அதன் பெயரையும் முத்திரையையும் பயன்படுத்த முடியாது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான யுஸ்மாடி யூசுப் கருத்துரைத்தார். இவ்விவகாரத்தில் ஜ.செ.க-விற்கு அதிகாரத்துவ கடிதத்தை ஆர்.ஓ.எஸ் வழங்குவது சிறப்பு என வழக்கறிஞர் மன்றத்தின் சட்டப்பிரிவு துணைத்தலைவர் சுரேந்திரா ஆனந்த் கூறினார்.இக்கடிதத்தை வைத்து ஆர்.ஓ.எஸ்-சிடம் ஜ.செ.க மேல் முறையீடு செய்ய முடியும். இரு தரப்பிலும் சுமுகமான தீர்வுக்கு இது வழி வகுக்கும் என்றும் அவர் சொன்னார். கட்சியின் பதிவை ரத்துச் செய்யும் நோக்கம் இல்லை. ஆனால், மத்திய செயலவைக்கு மறுதேர்தலை அது நடத்த வேண்டும் என்று ஆர்.ஓ.எஸ் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்