(ஆர்.குணா) கோலாலம்பூர், கம்போங் துங்குவில் உள்ள மின் சுடலை இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைவதால் தாங்கள் சிரமத்திற்கு ஆளாவதாக மக்கள் புகார் செய்துள்ளனர். பெட் டாலிங் ஜெயா உத்தாரா, பெட்டாலிங் ஜெயா செலாத்தான், கிளானா ஜெயா, சுபாங், டாமன்சாரா போன்ற பகுதிவாழ் மக்கள் பயன்படுத்தும் வசதியான இடத்தில் அந்த மின்சுடலை அமைந்துள்ளது. அதன் குறைந்த கட்டணமும் மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது. எனினும், அதில் அடிக்கடி இயந்திரங்கள் பழுதடைந்து விடுவதால் சிரமங்களை சந் திக்க நேரிடுகிறது என்று அப்பகுதி வாழ் மக்கள் சார்பில் புகாரை முன்வைத்துள்ளார் பி.ஜே. உத்தாரா ம.இ.கா துணைத் தலைவர் பத்மநாபன். இந்த மின் சுடலையை முறையாக பராமரிக்க வேண்டியது பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் பொறுப்பாகும். ஆனால், அது அலட்சியம் காட்டி வருவதே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமாகும் என்று அவர் கருத்துரைத்தார். முன்னாள் துணை அமைச்சர் டத்தோ டி.முருகையா, பி.ஜே.உத்தாரா உதவித் தலைவர் சுப்பிரமணியம், பத்மநாபன் ஆகியோர் நேற்று கம்போங் துங்கு மின்சுடலையை பார்வையிட்டனர். அடுத்த வாரம் மாநகர மேயரை சந்தித்து, மின்சுடலையை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்