கோலாலம்பூர், அந்தஸ்து தராதரம் பாராமல் எவ்வாறு ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றதோ, அதே போல குண்டர் கும்பல் நடவடிக்கை களில் ஈடுபடுவோரும் களையெடுக்கப் படுவர் என்று மலேசிய அரச போலீஸ் படை கங்கணம் கட்டியுள்ளது. இந்த இலக்கை நோக்கி, போலீஸ் படையினர் ஆகக்கடைசியாக மேற்கொண்ட ஓப்ஸ் சந்தாஸ் ஹாஸ் நடவடிக்கையில் இரட்டை ஏழு குண்டர் கும் பலின் தலைவனை அவர்கள் தங்கள் வலையில் சிக்கவைத்தனர். திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையாக ஓப்ஸ் சந் தாஸ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 800 சந்தேகப் பேர்வழிகள் பிடிபட்டுள்ளனர். இன்னும் அதிகமானவர்கள் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வருகின்ற போதிலும், அவர்கள் எவ் வளவு பெரிய இடத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிராக போலீசின் வேட்டை தொடரும் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ காலிட் அபு பக்கார் சூளுரைத்துள்ளார். இன்னும் அதிகமான குண்டர் கும்பல் தலைவன்களும் அவர்களின் அடியாட்களும் தலைமறைவாக இருக்கின்றனர். அண்மையில் இரட்டை ஏழு குண்டர் கும்பலின் தலைவன் சிரம்பானில் பிடிபட்டது போலீசுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியா கும் என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்தது. அந்த 47 வயது ஆடவர், பேரா செண்டிரியாங்கில் நிகழ்ந்த குற்றத்திற்காக போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் என்றும் அவ்வட்டாரம் குறிப்பிட் டது. இதனை த ஸ்டார் நாளேடு வெளியிட்டுள்ளது. பாக் லொங் கான் அல்லது பிரதர் கான் என்ற குண்டர் கும்பல்கள் மத்தியில் பெயர் பெற்ற அவர், மற்ற ரகசிய கும்பல்களுடனும் தொடர்பு உடையவர் என்று போலீசார் கூறுகின்றனர். அச்சுறுத்தி பணம் பறிப்பது, பாதுகாப்பு பணம் கோருவது போன்ற குற்றச்செயல்களில் அவன் ஈடுபட்டு வந்துள்ளான் என்று தெரிய வருகிறது.இரவு கேளிக்கை மையங்கள் போன்ற வர்த்தக இடங்களில் வாகன நிறுத்துமிடங்களை பாதுகாப்பதும் அவர்களின் வேலையாக இருந்து வந்துள்ளது. இந்த சிறப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த ஜனவரி முதல் இம்மாதம் (ஜூலை) 5-ஆம் தேதி வரை சுமார் 770 பேர் கைது செய்யப்பட்டனர் என்று புக்கிட் அமான் ரகசிய கும்பல், சூதாட்டம், விபச்சார தடுப்புப் பிரிவின் மூத்த துணை இயக்குநர், துணை ஆணையர் டத்தோ ரொஹாய்மி முகமட் இசா கூறினார். மொத்தம் 92 பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் 111 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். இவ்வாண்டு கைது செய்யப்பட்ட மற்றவர்களில், பினாங்கின் குண்டர் கும்பல் 24-இன் தலைவர் என நம்பப்படும் ஒரு டத்தோஸ்ரீ, 4 டத்தோக் கள் உட்பட மிகவும் கொடூரமான 60 குண்டர் கும்பல் உறுப்பினர்களைக் கண்டு பிடித்திருப்பதாக அவர் சொன்னார். அவர்களில் 34 பேர் மிகவும் பேர்போன 360 தேவன் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது கேங் 36-லிருந்து பிரிந்துபோன கும்பலாகும். கேங் 36 , கொள்ளை, பணம் பறிப்பு, போதைப்பொருள், கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. குண்டர் கும்பல்களைச் சேர்ந்த நூற்றுக்கணக் கானவர்களை குறிவைத்து புக்கிட் அமான் அதன் வலையை இறுக்கி வருகிறது. அக்குற்றவாளிகளில் சிலர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் அல் லது வெளியேறும் திட்டத்தில் இருக்கலாம் என்ற சாத்தியத்தையும் அவர் நிராகரிக்க வில்லை. நாட்டின் அனைத்து நுழைவாயில்களையும் போலீசார் கண்காணித்து வருவதாகவும் அவர்கள் தங்களின் ஒழுங்கீன நடவடிக்கைகள் வழியாக சேர்த்துள்ள சொத்துக்களை போலீசார் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்