கோலாலம்பூர், பெண்களை உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருளாகப் பார்க்காதீர்கள். சமுதாயத்தின் உணர்வுகளை அவர்களின் அதிகம் புரிந்து கொண்டு, அவர் களை மதிக்க தெரிந்துகொள்ளுங்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவுறுத்தியுள்ளார். ஷெல் பெட்ரோல் நிறுவனத்தின் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ஒரு பெண்ணிடம் தகாத முறையில் சிலர் நடந்து கொண்ட சம்பவம் குறித்து பிரதமர் நஜீப் தனது அகப்பக்கத்தில் இக்கருத்துகளை பதிவேற்றம் செய்திருந்தார். குறிப்பிட்ட அந்த விளம்பரத்தில் வரும் அப்பெண்ணின் கட்-அவுட்டைப் பயன் படுத்தி, முத்தமிடுவது போன்ற பல்வேறு விஷமத்தனத்துடன் நிழற்படங்கள் சமூக ஊடங்களில் அண்மையில் பதிவேற்றம் செய்யப் பட்டன. சிலர் இதனை நகைச்சுவைக்காக செய்திருக்கின்றனர். ஆனால், அவர்களின் செயல்களில் அநாகரீகங்கள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன. அது ஒரு பெண் ணின் விளம்பரப் போஸ்டர் தான் என்றாலும், அவர்களின் செய்கைகள், வெட்கப்படக் கூடியதாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் இருந்தன. நமது கலாச்சாரத்திற்கும் மரபு களுக்கும் முரணானதாக இருந் தன என்று பிரதமர் சுட்டிக்காட்டி னார். இப்படிப்பட்ட செயல்கள் நடந்திருக்கவே கூடாது. பெண்களுக்கு எதிராக வெகுசிலர் செய்த அவமதிப்பான, மரியாதைக் குறைவான செயல். நமது தாய்மார்களாக, மனைவியாக, பிள்ளைகளாக சகோ தரி களாகத் திகழும் பெண் சமுதாயத்திற்கு வசதியான, பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவதற்கு நாமே பொறுப்பாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்