பெருஜி பெருமாள் - படம்: கி.தீபன்) கோலாலம்பூர், பல்லாண்டுக்கால போராட்டத் திற்குப் பிறகு 70 வயது சுப்பையா நாராயணசாமிக்கு குடியுரிமை கிடைத்துள்ளது. இதுகுறித்து மட்டற்ற மகிழ்ச்சி தெரி வித்த பெரியவர் நேற்று நேரடியாக நண்பன் அலுவலகத்திற்கு வந்து தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். மலேசிய நண்பன் தீர்வை நோக்கி பகுதியில் இப்பெரியவரின் பிரச்சினை இரண்டு முறை முன்னிலைப்படுத்தப்பட்டது. முப்பது வருடத்திற்கு மேலான போராட்டம். சிலாங்கூர் பத்து தீகா பில்மோர் தோட்டத்தைச் சேர்ந்த இவர், ஐந்து முறை மலாய் மொழி சோதனைக்குச் சென்றுள்ளார். குடியுரிமைக்கு வழியே இல்லையா? புதுவாழ்வே இல்லையா? இப்படியாக இவரின் புலம்பல் ஒரு ஏக்கமாக இருந்தது. பலமுறை உள்துறை அமைச்சு அலுவலகத்திற்கு சென்று வந்தார். கடந்த ஜூன் 22ஆம் தேதி யன்று புத்ராஜெயா தேசிய பதிவுத் துறை தலைமையக அலுவலகத்தில் மை டப்தார் இயக்கத்தல் நான் கலந்து கொண்டேன். எனது குடி யுரிமை விண்ணப்பம் சம்பந்த மான ஆவணங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உங்களுக்கான குடியுரிமை பத்திரத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று தலைமையக அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. இம்மாதம் ஜூலை நான்காம் தேதியன்று நான் எனக்குரிய குடி யுரிமை யினை பெற்றுக் கொண்டேன். இறுதியாக இந்நாட்டு குடிமகன் அந்தஸ்து பெற்ற பெரும் பாக்கியம் குறித்து இந்த மூத்த குடிமகன் புலகாங்கிதம் அடைகிறார். என் அனுபவங்களிலிருந்து ஒன்றை தெரிந்துக் கொண்டேன். விடா முயற்சி வெற்றியளிக்கும் என்கிறார் இவர். இவரின் தொடர்பு எண் 012-6508347 அல்லது 03-88801869. தனது அனுபவங் களை வைத்து இதர விண் ணப்பதாரர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க தயாராக இருக்கிறார் பிறர் நலன் பேணும் சுப்பையா நாராயணசாமி. இறுதியாக மஇகாவிற்கும் தேசிய பதிவு இலாகாவிற்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்