img
img

முகம் சிதைந்த நிலையில் இந்திய இளைஞரின் சடலம்
ஞாயிறு 09 ஜூலை 2017 13:59:09

img

(தமிழ்ச்செல்வி) அலோர்காஜா, முகம் சிதைந்து, உடல் அழுகிய நிலை யில் இந்திய இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இரு வாரங்களுக்கு முன்பு காணாமல் போன யுவராஜ் த/பெ இராஜசேகர் (23வயது) என்பவரின் உடல் தான் என அவரின் குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் கூறினர். வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் தஞ்ஜோங் ரிமாவ் டாலாம், காடேக் ஜாலான் கேராத்தி லாமா அலோர்காஜாவில் உள்ள ஆற்றங் கரை யில் பொதுமக்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து போலீசார் அவரது உடலை கண்டெடுத்தனர். வயிற்று பகுதியில் ஆழமான கத்தி குத்து காயங்களும், முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்தும் காணப்பட்டதாக கூறப்பட்டது. அவரது காலில் பச்சை குத்திய அடையாளத்தை வைத்து அது யுவ ராஜ் உடல் என்பதை குடும்ப உறுப்பினர்கள் நம்புவதாக மரணமுற்ற யுவராஜின் தாயார் கண பதியம்மாள் (52) கூறினார். சிரம்பானில் வேலை செய்து வந்த யுவராஜ் கடந்த 26/6/2017 புக்கிட் தம்பினில் உள்ள வீட்டிற்கு திரும்பி உள்ளார்.தம்பின் தாமான் குலோனியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று அங்கு தங்கியிருந்த யுவராஜ் அன்று இரவு வீட்டிலிருந்து மர்மமான முறையில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவரது சட்டை வீட்டின் கேட்டிலும் , அவரது காலணி வீட்டு வாசலிலும் இருந்தது. அவரை பல இடங்களில் தேடி கிடைக்காததால். அதனைத் தொடந்து தம்பின் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக கணபதியம்மாள் தெரிவித்தார்.காணாமல் போனவரை பற்றி 24 மணி நேரத்திற்கு பிறகு புகார் கொடுங்கள் என்று போலீசார் சொல்லிவிட்டதால் பின்பு 27/6/2017 போலீஸ் புகார் செய் தோம். ஆனால் அவர் காணாமல் போன நாள் முதல் இதுவரை 4 போலீஸ் புகார் செய்து விட்ட போதிலும் இதுவரை போலீஸ் அதிகாரி எங்களை அணுகி விசா ரணை செய்யவில்லை. காணாமல் போனவர் குறித்து எங்கள் வீட்டுக்கு கூட போலீஸ் வரவில்லை என்றார் அவர். மகனை பிரிந்து பரிதவிக்கும் எங்களை காவல் துறையினர் அலட்சியம் படுத்தினர். வீட்டுக்கு மூத்தப் பிள்ளையான இவர் எங்களை வழி நடத்துவார் என எண்ணி இருந்தோம் . ஆனால் அவர் பிணமாக கிடைப் பார் என கனவிலும் நினைக்க வில்லை என கண்ணீருடன் கணபதி யம்மாள் கூறினார். மகன் காணாமல் போன அன்றே காவல் துறை சற்று அக்கறையுடன் அவரை தேடி இருந்தால் எங்கள் மகன் எங்களுக்கு கிடைத்திருப்பார் என நேற்று அலோர்காஜா சவக்கிடங்கில் யுவராஜ் உடலை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்தப் போது நண்பனிடம் கூறினர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img