img
img

கேஎல்சிசியில் ஆயு தங்களுடன் போலீசார் சோதனை நடவடிக்கை.
ஞாயிறு 09 ஜூலை 2017 13:48:56

img

கோலாலம்பூர், கேஎல்சிசியில் ஆயு தங்களுடன் போலீசார் சோதனை நடவடிக் கையில் ஈடுபடுவ தைக் கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் நேற்று கூறினார். தென்கிழக்காசிய நாடுகளுக்கான சீ விளையாட்டுப் போட்டி அடுத்த மாதம் கோலாலம் பூரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக தென்கிழக்காசிய நாடுகளை தவிர்த்து அனைத்துலக ரீதியில் இருந்து மக்கள் மலேசியாவுக்கு வருகை தருவார்கள். இவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் தான் போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிகளின் அடிப் படையில்தான் ஆயுதம் ஏந்திய போலீஸ் அதிகாரிகள் இன்றும், நாளையும் கேஎல்சிசியில் பயிற் சிகளை மேற்கொள்வார்கள். காலை 8 மணி முதல் 2 மணி வரை அவ்வதிகாரிகள் அங்கு பயிற்சியில் ஈடுபடுவார்கள். ஆகவே அவர்களைப் பார்த்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று டான்ஸ்ரீ காலிட் செய்தி யாளர்களிடம் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img