img
img

அந்நியத் தொழிலாளர்களை விரட்டி விரட்டிப் பிடிப்பதை நிறுத்துவீர்.
ஞாயிறு 09 ஜூலை 2017 12:46:38

img

கோலாலம்பூர், ஜூலை 9- பதிவு செய்யப் படாத சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை விரட்டி விரட்டிப் பிடிப் பதைக் குடிநுழைவுத் துறை முதலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மனித உரிமை அமைப்புகள் நேற்று ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பியுள்ளன. அவர்களை பிடிப்பதற்கு பதிலாக தொழி லாளர்களைச் சட்டப்பூர் வமாக்குவதற்கு நடப்பில் உள்ள முறைகளை முழுமையாக திருத்தி அமைக்க வேண்டும் என்று அவை வலியுறுத்தின. இப்போது நடத்தப்படும் அதிரடிச் சோதனைகள் நியாயமற்றவை என அகதிகள் உரிமைகளுக்காக போராடும் தெனாகானிதா செயல் இயக்குனர் ஆகில் பெர்னாண்டஸ் கூறினார். தொழிலாளர்களைப் பதிவு செய்யாதது முதலாளிகளின் குற்றம். ஆனால், குடிநுழைவுத்துறை பாதிக்கப்பட்டவர்களைப் பிடித்து நாடு கடத்துகிறது. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது முதலாளிகளின் மீதே தவிர தொழிலாளர்கள் மீது அல்ல. வேண்டுமானால் சம்பந்தப்பட்ட தொழி லாளர்களை முதலாளிமார்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வழக்குகளில் சாட்சிகளாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என நேற்று அவர் தெரிவித்தார். சட்ட விரோதத் தொழிலாளர்களுக்குத் தற்காலிக வேலை அனுமதிகள் (இ- கார்ட்) பெற நான்குமாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் முதல் தேதி தொடங்கிய இ-கார்ட் விண்ணப்ப கால அவகாசம் கடந்த ஜூலை 30 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து இம் மாதம் முதல் தேதியிலி ருந்து சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை விரட்டி விரட்டிப்பிடிக்கும் அதிரடி நடவடிக்கையை குடி நுழைவுத் துறை தொடங்கியுள்ளது. தங்களை தங்கள் முதலாளிகள் குடிநுழைவுத்துறையிடம் பதியாததால் பலர் வீட்டை விட்டு வெளியேறவே பயப்படுகின்றனர். இரவு நேர நடமாட்டத்தை குறைத்துக்கொண்டனர். எப்போது குடிநுழைவுத்துறை தங்களை பிடிக்கும் என்ற பயத்தில் உள்ளனர். கோலாலம்பூர் மாநகர் போன்ற பெரிய நகரங்களில் அந்நியத் தொழி லாளர்களின் நடமாட்டம் பெருவாரியாக குறைந்துள்ளது. இவ்வாறு தங்களை பதிந்து கொள்ளாத அந்நியத் தொழிலாளர்கள் தாமே வந்து சரண் அடைய வேண்டும். இல்லையேல் அதிரடி சோதனையின் மூலம் கைது செய்யப்படுவார்கள் என்று குடிநுழைவுத்துறை எச்சரித் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img