(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு, சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காகச் சென்ற லோகேஸ் செல்வராஜ், சுரேந்திரன் ராஜேந்திரன் ஆகிய இரு இளைஞர்களும், அச்சமயத் தில் தங்கள் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஸ்கூடாய் அருகே ஜொகூர் பாரு-ஆயர் ஈத்தாம் சாலை 10-ஆவது கிலோ மீட்டர் தொலைவில் இச்சம்பவம் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் நிகழ்ந் தது. இதற்கு முன்பு, சம்பவத்தில் உயிரிழந்த அவ்விருவருடன் மேலும் ஒருவரும் தங்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ் விபத்தை கண்ணுற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகச் சென்றுள்ளனர் என்று ஜொகூர் பாரு வட பகுதி மாவட்ட போலீஸ் அதிகாரி முகமட் தாய்ப் அஹ்மட் கூறினார். அவ்விபத்தில் மாண்டவர்கள் பேரா, லஹாட் தாமான் டேசா பிஞ்சி உத்தாராவைச் சேர்ந்த லோகேஸ் செல்வராஜ் (வயது 29), கோலாலம்பூரைச் சேர்ந்த சுரேந்திரன் ராஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டது. அவ்விபத்தில் மேலும் மூன்று இந்திய இளைஞர்கள் கடுமையான காயங்களுக்கு இலக்காகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முகமட் தாயிப் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு விபத்தில் சிக்கியவருக்கு உதவ முற்பட்ட போது புரோட்டோன் பெர்சோனா வாகனம் ஒன்று அந்த ஐவரையும் மோதியதோடு அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் மோதித் தள்ளியதாக தெரிவித்த முகமட் தாயிப் அமார் காயமடைந்த மற்ற மூவரின் அடையாளங்கள் உடனடியாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார். ஐவரையும் மோதிய வாகனமோட்டி கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனத்தையும் மோதிய போதிலும் இலேசான காயங்களுடன் தப்பியதாக தெரிவித்த அவர் விபத்து நடந்த போது மழை பெய்த வேளையில் விபத்து நிகழ்ந்த இடம் இருட்டாக இருந்ததாகவும் தெரிவித்தார்.1987 சாலை போக்கு வரத்துச் சட்டம் பிரிவு 41 இன் கீழ் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விபத்தில் மாண்ட இருவரின் சடலங்ளும் கூலாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சவப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சடலங்கள் கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்