(ஆர். குணா) கோலாலம்பூர், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருட்களை கோலா லம்பூர் போலீஸ்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சுங்கைபீசியில் உள்ள வீடமைப்பு பகுதியில் கடந்த ஜூலை 6ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் போலீசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அங்குள்ள வீடொன்றில் நுழைந்த போலீஸ் அதிகாரிகள் அவ்வீட்டை முற்றிலும் சோதனையிட்டனர். அப்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களை போலீசார் கண்டு பிடித்தனர்.2004.5 கிராம் கொண்ட போதைப்பொருட்கள், 1200 போதை மாத்திரைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இப்போதைப் பொருட்களின் மதிப்பு 1 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியாகும். இதை தவிர்த்து அவ்வீட்டில் இருந்து 600 வெள்ளி ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் ஆடவர் ஒருவரையும், இந்தோனேசிய பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர் என்று கோலாலம்பூர் போதைப்பொருள் குற்ற புல னாய்வு பிரிவு தலைவர் குவான் பெங் காங் கூறினார்.இவ்விருவரும் ஜூலை 13ஆம் தேதி வரை போலீஸ் தடுப்பு காவலில் வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்