img
img

சுங்கைத்துவா வீடமைப்பு திட்டத்தில் மோசடி
சனி 08 ஜூலை 2017 12:55:46

img

(ஆர். குணா) கோலாலம்பூர், சுங்கைத்துவா வீடமைப்பு திட்ட மோசடி விவகாரத்தில் இருவரை போலீஸ் தேடி வருவதாக செந்தூல் மாவட்ட போலீஸ்படைத் தலைவர் ஏசிபி முனு சாமி நேற்று கூறினார். கோலாலம்பூர் மஜ்முக் தொழிலாளர் கூட்டுறவுக் கழகம், பியோகோன் லேண்ட் சொத்துடைமை நிறுவனம் ஆகியவை இணைந்து சுங்கைத் துவாவில் மாபெரும் வீடமைப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தன. புகழ் பெற்ற ஒரு மேம்பாட்டு நிறுவனத்தின் முகவர்களாக கூட்டுறவுக் கழகமும், பியோகோன் லேண்ட் சொத்துடைமை நிறுவனமும் மக்களுக்கு அவ் வீடுகளை விற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன. இரண்டு, மூன்று மாதிரி வீடமைப்புத் திட்டத்தை கொண்டு சுங்கைத் துவாவில் பிரமாண்ட திட்டம் உருவாக்கப்படவுள்ளது. அதுவும் குறைந்த விலையில் வீடுகள் கட்டப்படவுள்ளன என்று அக் கூட்டுறவுக் கழகம் விளம்பரம் செய்தது. கூட்டுறவுக் கழகத்தின் விளம்பரங்களை நம்பி நூற்றுக்கணக்கான (450க்கும் மேற்பட்டோர்) மக்கள் அங்கு வீடுகளை வாங்க முன் பணம் செலுத்தியுள் ளனர். திட்டமிட்டப்படி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு முறையாக ஒப்படைக்கப்படும் என மக்கள் நம்பினர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவ் வீடுகளை கட்டுவதற்கான அடித்தளம் கூட அமைக்கப்படவில்லை என்றதும் மக்களிடையே பெரும் ஆட்சேபம் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கூட்டுறவுக் கழகம் உட்பட மேம்பாட்டு நிறுவனங்கள் மீது போலீஸ் புகார்களை செய்துள்ளனர். மக்களின் புகார்களின் அடிப்படையில் இவ்விவ காரத்தில் தொடர்புடைய மாறன் த/பெ ராமன் (51 வயது), சுமதி த/பெ முத்து சாமி (34)ஆகிய இருவரை யும் போலீஸ்படை தேடி வருகின்றனர். விசாரணைக்கு உதவும் வகையில் இவ்விருவரும் உடனடியாக போலீசில் சரணடைய வேண்டும். இவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் செய்யலாம். அல்லது இன்ஸ்பெக்டர் லியூ போன் தாட் 012-3689329, 03-40482222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று முனுசாமி கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img