img
img

குழாய் நீர் அழுத்தம் குறைவால் காப்பார் மக்கள் அவதி.
சனி 08 ஜூலை 2017 12:38:06

img

(பி. எம். குணா) காப்பார், குழாய் நீரின் அழுத்தம் குறைவால் இங்குள்ள தாமான் ஏமாஸ் குடியுருப்புவாசிகள் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாக புகார் எழுப்பப்பட்டதை தொடர்ந்து குத்தகையாளர்கள் அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் இறங்கினர். ஏற்கெனவே பூமிக்கடியில் பொருத்தப்பட்ட குழாய்களை சோதனை யிட்ட அவர்கள் மேற்பட்ட பிரச்சினைக்கு உட னடி தீர்வு காண்பது கடினம் என தெரிவித்ததாக குடியிருப்புவாசிகள் சிலர் தெரிவித்தனர். மேலும், இந்தப் பிரச்சினை சம்பந்தப்பட்ட குடியிருப்பின் ஒரு பகுதியில் மட்டும் எழவில்லை மாறாக அக்குடியிரிப்பின் முழுவதும் நீர் குழாய்கள் சோதனையிடப்பட வேண்டும் என குத்தகையாளர்கள் குடி யிருப்பாளர்களிடம் விளக்கியதாகவும் தெரிய வருகிறது. இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படாமல் இருப்பதை குடியிருப்பாளர்கள் உறுதி செய்வதுடன் சம்பந்தப்பட்ட நீர் நிறுவனத்தின் திட்டங்களுக்கு இயன்ற ஒத்துழைப்பு வழங்கும்படியும் அக்குத்தகையாளர்கள் நினைவுறுத்தியதாகவும் அறிய வருகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரச்சினை நீடிப்பதாக அக்குடியிருப்புவாசிகள் கடந்த வாரம் மலேசிய நண்பனிடம் முறையிட்டனர். 25 ஆண்டு களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட தாமான் ஏமாஸ் 3-இல் இந்த பிரச்சினை தொடர்ந்து கடுமையாகி வருவதால் மக்கள் தினமும் அவதிப்பட்டுக் கொண் டிருப்பதாக தெரியவருகிறது. தாமான் ஏமாஸ் 1,2,3 என கட்டம் கட்டமாக உருவாக்கப்பட்ட இக்குடியிருப்புகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் இந்தியர்கள்.ஞாயிற்றுகிழமைகளில் குழாய் நீர் அழுத்தம் மேலும் கடுமையாகி வருவதாக குடும்ப மாதர்கள் முறையிட்டனர். இந்த பிரச் சினைக்கு ’ஆயர் சிலாங்கூர்’ எனும் மாநில நீர் நிறுவனம் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அம்மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். குழாய் நீர் அழுத்தம் குறைவால் வீட்டின் அன்றாட தேவைகள் மட்டுமல்ல உணவுக் கடைகளை நடத்துபவர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வரு கின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img