img
img

இன்னல்களைச் சுமக்கும் பத்துகாஜா இந்தியர்கள்.
வெள்ளி 07 ஜூலை 2017 15:31:29

img

ப.சந்திரசேகர் பத்துகாஜா, அனைத்துலக அளவில் பத்து காஜா நகர் மிக பிரபலமாக பேசப்படுவதற்கு இங்கு அமைந்துள்ள காதல் கோட்டை கெலிகாஸ்டல் ஒரு காரணமாக இருந் தாலும் இந்நகரில் வாழ்ந்த இந்தியர்களுக்கு அடையாளச் சின்னமாக கோவிலைத் தவிர வேறு எந்த அடிச்சுவடும் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது.இந்நகரில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் நமக்கென்று ஓர் அடையாளம் இல்லாமல் போனது பற்றி மிக கவலையுடன் பகிர்ந்து கொண்டனர். நீண்ட கால வரலாற்றை கொண்ட பத்துகாஜா இந்தியர்கள் இது நாள்வரை சொந்த பல்நோக்கு மண்டபத்தை கூட கொண்டிருக்காதது கவலை அளிக்கிறது என்று ஆறுமுகம் சின்னையா தனது வேதனையை மலேசிய நண்பனுடன் பகிர்ந்து கொண்டார்.1907 ஆம் ஆண்டுகளில் பத்து காஜாவில் மிக பிரபலமான பெரும் நிலக்காரர் மலைப்பெருமாள் வாழ்ந்தார். இன்று சுல்தான் யூசோப் இடைநிலைப்பள்ளி கம்பீரமாக காட்சி அளிப்பதற்கு அவர்தான் காரணம். ஏழை மக்கள் ஆங்கிலம் படிக்க வேண்டி தம்முடைய வீட்டை பள்ளியாக மாற்றினார். பிறகு அந்த வீடு பள்ளியாக மாறியது என்று அவரின் பேரன் டத்தோஸ்ரீ அஸ்லானி செல்வமணி கூறினார். மேலும் பத்து காஜா நகர் மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் அவர் காலத்தில் கட்டப் பட்டது. 1909ஆம் ஆண்டு நிலத்தை கொள்முதல் செய்து எழுப்பப்பட்ட ஆலயம் முதல் கும்பாபிஷேகம் 1925இல் நடைபெற்றது. சைவ பரிபாலன சபா அமைப்பை அமைத்து கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை பராமரித்தார். இன்று அவரது பெயரில் ஆலயத்தில் கல்வி நிலையம் அமைத்து பாலர் பள்ளி, நடனப் பள்ளி, எஸ்பிஎம் முகாம், நூல் நிலையம் அமைத்து சேவையாற்றுகின்றோம் என்று ஆலயத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் கூறினார். பத்துகாஜாவில் இந்தியர்களுக்கென்று ஓர் அடை யாளச் சின்னமாக இந்து ஆலயங்கள் மட்டுமே அமைத்துக் கொடுத்துள்ளனர் என்று கூறினார். பத்துகாஜா நாடாளுமன்றம் இதற்குட்பட்டமூன்று சட்டமன்ற தொகுதிகளான துரோனோ, மகிழம்பு, ஜெலப்பாங் ஆகியவை உள்ளன. பத்துகாஜா நாடாளுமன்றத்தில் ஏறக்குறைய சுமார் 35 ஆயிரம் இந்தியர்கள் வாழ்கின்றனர். இதில் 13 ஆயிரம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். 12 ஆயிரம் பேர் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்றாலும் இவர்கள் இன்னும் பதியவில்லை. பத்துகாஜா தொகுதியில் இந்தியர்களுக்கென்று ஓர் அடையாளச் சின்னமாக பொது மண்டபம் இல்லாதது ஒரு குறையாகத்தான் இருக்கிறது. இதற்கு யாருமே அடித்தளம் அமைக்கவில்லை என்றாலும் பத்துகாஜா தொகுதி காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்றப்பிறகு இத்தொகுதியில் இந்தியர்களுக் கான பல்வேறு திட்டங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறோம். பத்துகாஜா தொகுதியில் மூன்று தமிழ்ப்பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் மெங்களம்பு தமிழ்ப்பள்ளி புதிய பள்ளியாக உருவெடுத்து அதன் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நான்காவது புதிய பள்ளியாக ஜெலப்பாங்கில்அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான அங்கீகாரத்தை பெற மனு செய்துள்ளோம். ஜெலப்பாங் பகுதியில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள் ளியில் சேர்க்க ஆர் வம் கொண்டிருக்கின்றனர். பல மைல் தூரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். பத்துகாஜாவில் இந்தியர்களுக்கென்று ஒரு பல்நோக்கு மண்டபம் இல்லாத குறையை போக்குவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம் என்று தொகுதித் தலைவர் புலிகேசி கூறினார்.பத்து காஜா மக்கள் பயன்பாட்டிற்காக மிக நேர்த்தியான முறையில் ஈமச் சடங்குகள் செய்வதற்கு இடம் அடையாளம் காணப்பட்டு அதன் வரைபடங்கள் மாவட்ட அலுவலகத்தில் அனுமதி பெற சமர்பிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். பத்துகாஜாவில் ஒரு மின்சுடலை கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து மஇகா தேசியத் தலைவரிடத்தில் பேசியுள்ளேன். விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர் பார்ப்போம். பத்துகா ஜாவில் பிறந்து வளர்ந்து இங்கேயே வர்த்தகத் தில் ஈடு பட்டு வரும் எம்.ஆறு முகம் (வயது 59), எஸ்.அரு ணாசலம் (வயது 68), இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தார்கள் என்பது மறுப்பதற்கு இல்லை. ஆனால் இந்தியர்கள் இங்கு வாழ்ந் ததற்கு அடை யாளமாக அடிச்சுவடு எதுவும் இல்லாதது பெருங் குறையா கத்தான் இருக்கிறது. இப்பகுதியில் ஒரு பல்நோக்கு பொது மண்டபம் அமைத்திருந்தால் இது அனை வருக்கும் பயனுள்ளதாக இருந்தி ருக்கும் என்று கூறினார்கள். பத்துகாஜா என்று இந்நகருக்கு எப்படி பெயர் வந்தது என்று முதியவரான ஆறுமுகத்திடம் கேட்ட போது இங்குள்ள கிந்தா ஆற்றில் பாறைக ளும், கற்களும் நிறைந்திருக்கும். இப்பாறைகளின் வடிவம் யானையை போன்றிருந்ததால் பத்துகாஜா என்று பெயர் சூட்டப் பட்டது. காலனித்துவ ஆட்சி காலத் தில் இங்கு சாலை வசதிகள் இல்லை. எல்லாம் குதிரை சவாரிதான். பத்துகாஜா நகரை சுற்றி விவசாயம், மீன் வளர் ப்பு, கால்நடை வளர்ப்பில் அதிகம் ஈடுபாடு காட்டப்பட்டது. சீக்கியர்கள் பலர் இங்கு கால்நடை வளர்ப்பில் ஈடுபாடு காட்டினர். சிறு சிறு தொழில்பேட்டைகள் உருவானதால் வேலை இல்லாமல் படாத பாடுபட்டோம் என்று எஸ். அருணா சலம் கூறினார். மாவட்ட அதிகாரியாக ஜைனால் காரிப் தமிழ்ப்பள்ளிக்கு நிலம் ஒதுக்கித் தருவதில் முக்கிய பங்காற்றினார். அன் றைய காலக்கட்டத்தில் தமிழ்ப்பள்ளி கட்டுவதில் ஏற்பட்ட சிரமத்தைத் தொடர்ந்து பொது மண்டபம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வில்லை. இப்பகுதியில் சீனர்கள் பொது மண்டபங்களை கட்டிக் கொண்டனர். பத்துகாஜா பகுதியில் மற்ற இனத்தவர்கள் கொண்டிருக்கும் பொது மண்டபங்கள் போல இந்தியர்களுக்கு இருக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறுமா என்று பெ.செல்வராமன் கேள்வி எழுப்பினார். பத்துகாஜா அவசரகாலம் பிறப்பிக்கப்பட்ட காலத்தில் உருவான இந்தியர் செட்டில்மெண்ட் குடியிருப்புப் பகு தியில் 200 இந்திய குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. அந்த காலக்கட்டத்தில் இந்தியர்கள் ஒன்றாக குடியேறிய பகுதியாக இருந்தது. காலப்போக்கில் இப்பகுதி டேசா சங்காட் என்று உருமாற்றம் கண்ட பிறகு இந்தியர் செட்டில்மெண்ட் பெயரும் சிறுக சிறுக அழிக்கப்பட்டது. இப்பகுதியில் குடியேறிய இந்தியர்கள் நினைவாக ஒரு மண்டபத்தை கட்டவில்லை என்று எம்.ஆறுமுகம் கூறினார். பத்துகாஜாவில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் எழுப்புவதற்கு வாய்ப்பும் நிறைந்துள்ளது. பலர் சொந்த வியா பாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பத்துகாஜா மார்க்கெட்டில் மூன்றாவது தலைமுறையாக பலசரக்கு, காய்கறி வியாபாரம் செய்து வரும் க.துரைசிங்கம் (வயது 32) இங்கு வியாபாரம் தற்போது மந்தமாக இருந்தாலும் நல்ல முறையில் வியாபாரம் நடக்கிறது என்று கூறினார். பத்துகாஜா மாவட்ட அலுவலகம் கட்டிவரும் சிறு கடைகளை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக இரண்டு வருடமாக சீனக்கடையில் உணவு கடை வைத்துள்ள மு.தமிழ்ச்செல்வி (வயது 40) கூறினார். குறைந்த வாடகையில் கடை கிடைத்தால் நிரந்தமாக வியாபாரம் செய்ய முடியும் என்பது இவரின் கருத்து. மேலும் பலமுறை விண்ணப்பம் நிரா கரிக்கப்பட்டதால் தொடர்ந்து வியாபாரம் செய்து வருவதாக கூறினார். சொந்தமாக வியாபாரம் செய்வதற்கு ஆர்வம் அதிகம் இருந்தாலும் அதற்கான இடம் இல்லாதது குறையாகத்தான் இருக்கிறது என்று பெ.சோமசுந்தரம், ப.லெட்சுமி தம்பதிகள் கூறினர். பத்துகாஜா நகர் உலகப் புகழ் பெற்றது என்பதற்கு சுற்றுலாத் தலமாக உருவாகியுள்ள கோட்டையும் அதனையொட்டி அமைந்துள்ள ஆலயமும் ஆகும். நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற சரித்திரப்பூர்வ இடங்களை தற்காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்று சமூக ஆர்வலர் பால நாராயணன் கூறினார். பத்துகாஜாவில் இந்தியர்கள் தோட்டப்புறங்களிலும் ஈயச்சுரங்கங்களிலும் வேலை செய்து வந்தனர். ஈய விலை உச்சத்தில் இருந்த காலத்தில் மிகப் பிர பலமாக நகர் விளங்கியது. பேரா மாநிலத்தின் தலைமை நிர்வாக மையமாக பத்துகாஜா செயல்பட்டது. இன்னமும் நில அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகமும் இங்குதான் செயல்படுகிறது. காலனித்துவ ஆட்சியில் இந்நகர் முக்கிய இடம் பிடித்தது. தோட்ட நிர்வாகியான ஆங்கிலேயர் ஒருவர் தன் அன்பு மனைவிக்காக கட்டிய கோட்டை இன்று உலகப் புகழ் பெற்றிருக்கிறது. உலகின் பல பகு திகளிலிருந்து சுற்றுப்பயணிகள் இங்கு வருகின்றனர். இந்த அற்புதமான நேரத்தில் இந்தியர்கள் வரலாற்றுச் சின்னங்களை ஏற்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று சுகுமாறன் கூறினார். அந்த காலத்தில் ஒரு பொது மண்டபம் கட்டப்பட்டிருந்தால் இந்தியர்கள் ஒன்று கூடி விவாதம் செய்வதற்கு சிறப்பாக இருந்திருக்கும். இன்னும் காலம் கடந்து விடவில்லை. நடப்பு அரசியல் தலைவர்கள் இப்பணியை ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று ஆ.சுகுமாறன் கூறினார். இந்தியர்களுக்கு என ஓர் அடையாளத்தை தொலைத்து விட்டு நிற்கின்றோம். பத்து காஜா நகர் சரித்திர நகரில் நாம் சரித்திரத்தை தொலைத்து விட்டோம் என்று கூறினார். கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினராக ஜசெகவின் வீ.சிவகுமார் பொறுப்பேற்றார். அவரிடம் பத்து காஜா வளர்ச்சி திட்டம் பற்றி கேள்வி எழுப்பினோம். பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு அதிகமானோர் விவசாயத்தில் ஈடுபாடு கொண்டவர்கள், கால் நடை வளர்ப்பிலும் ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களின் நிலப்பிரச்சினை தலையாய பிரச்சினையாக உள்ளது. புறம்போக்கு நிலப்பிரச்சினை வெள்ளப் பிரச்சினை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். காலங் காலமாக இத்தொகுதி எதிர்க்கட்சி வசமிருந்ததால் முதன்மையான வளர்ச்சி திட்டம் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை. இந்தியர்கள் அதிக அளவில் வசித்ததாக வரலாறு உண்டே தவிர இவர்கள் அடையாளம் கண்டு கொள்ள எந்த குறிப்போ, அல்லது அடையாள சின்னமோ கிடையாது. இதற்கு யாரை குற்றஞ்சொல்வது. எது எப்படி இருப்பினும் பத்து காஜா நகர் மேம்பாட்டு வளர்ச்சியில் அரசாங்கம் பாராமுகம் காட்டாமல் செயல்பட வேண்டும் என்று சிவக்குமார் கூறினார். ஒரு காலத்தில் பத்து காஜா மருத்துவமனை தான் முதல் நிலை மருத்துவமனையாக இருந்து வந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்தான் முதல் நிலை சிகிச்சை. ஆனால் இன்று நிலைமை மோசமாக உள்ளது. மருத்துவ நிபுணர்கள் இல்லை. மருத்துவர்கள் பற்றாக்குறை ஆம்புலன்ஸ் செயல்படாத நிலை போன்ற பாதிப்புகளில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர் என்று சிவக்குமார் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img