ரொம்பின், போதைப்பொருள் விநியோகஸ்தர்களை பிடிப்பதற்கான அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிக்கு முதுகிலும் கால்களிலும் காயம் ஏற் பட்டுள்ளது.போலீசாரின் வருகையை அறிந்து கொண்ட போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றபோது குறுக்கில் வந்த போலீசாரை அவர்கள் மோதி தள்ளியுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.06 மணியளவில் பண்டார் பாரு கோல ரொம்பினிலுள்ள சமிக்ஞை விளக்கு முச்சந்தியில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் ரொம்பின் மாவட்ட போலீஸ் படையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் பணிபுரியும் 35 வயதுடைய போலீஸ் அதிகாரிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. தப்பிச் செல்ல முயன்ற இரு போதைப்பொருள் விநியோகஸ்தர்களை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் கைது செய்ததாக இம் மாவட்டத்தின் போலீஸ் படைத் தலைவர் அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயிரம் வெள்ளி மதிப்பிலான 31.60 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.மேல் விசாரணைக்காக அவ்விருவரும் 2 வாரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்