(துர்க்கா) ஜெம்பூல், பணம் கேட்டு கொடுக்காத தந்தையை பாராங் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து தலைமறைவான மகன் கைதாகி காவலில் 7 தினங்களுக்கு தடுத்து வைக்க நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டது. நேற்று முன்தினம் காலை 9.00 மணியளவில் பகாவ் மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் தந்தையை கொலை செய்த (48 வயது) மகன் காவலில் தடுத்து வைக்க நீதிபதி முகமட் ரேட்ஜா அஜார் ரெஜாலி உத்தரவிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் பெல்டா லூய் தீமோர் நிலக்குடி யேற்றவாசி எஸ்.வேலாயுதம் (73 வயது), என்பவர் வீட்டில் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே மரண மடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. பணம் கொடுக்காத காரணத்தினால் தந்தையை இரக்கமின்றி பாராங் கத்தியால் வெட்டிக் கொலை செய்ததாக குற்றவியல் 302இன் கீழ் கைது செய்யப் பட்டு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகன் தீவிர புலன் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்று கூறப்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்