கோலாலம்பூர், அரசாங்கத்திற்குச் சொந்தமான 1 எம்டிபி மீதான போலீசாரின் புலன் விசாரணை அறிக்கையை சட்டத்துறை தலைவரின் அலுவலகம் (ஏஜிசி) திருப்பி அனுப்பி வைத்தது ஏன் என்பதற்கான காரணத்தை வெளியிட தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபக்கார் மறுத்து விட்டார். புக்கிட் அமானில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காலிட், இந்த விவகாரம் இன்னும் புலன் விசாரணையில் இருந்து வருவதாக மட்டும் கூறினார். ஆகவே, நான் தகவல்களை வெளியிட போவதில்லை என்றும் அவர் கூறினார். ஏஜிசி மேலும் புலன் விசா ரணை நடத்த இருக்கின்றதா என வினவப்பட்டபோது அவர் இவ்வாறு பதில ளித்தார். மேலும் வற் புறுத்தி கேட்டபோது, புலன் விசாரணை முடி வடைந்தவுடன் இந்த விவகாரம் தொடர்பாக கருத்துரைக்கிறேன் என்று காலிட் குறிப்பிட் டார். எனினும், அவர் ஒரு திட்டவட்டமான காலக் கெடுவை குறிப்பிடவில்லை. நாங்கள் புலன் விசாரணையை முடித்தவுடன் விவரங்களை வெளியிடுவோம் என்று அவர் சுருக்கமாக தெரிவித்தார். 1 எம்டிபி விவகாரத்தை மேலும் புலன் விசாரணை செய்யும்படி போலீசாருக்கு ஏஜிசி உத்தரவிட்டிருப்பதாகவும், தாங்கள் இப்போது புலன் விசாரணை நடத்தி வருவதாகவும் காலிட் ஜூன் 25ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறினார்.போலீசார் சமர்ப்பித்திருக்கும் புலன் விசாரணை அறிக்கைகளுக்கு ஏஜிசி இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் கூறியிருந்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்