கோலாலம்பூர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவர் மறுபடியும் தீவிர அரசியலில் பிரவேசிக்க வேண்டும். அவர் நாட்டின் பிரதமராக வருவதை ஆதரிப்பேன் என்று அன்வாரின் பரம வைரியாக கருதப்பட்ட முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார். முன்னாள் துணைப் பிரதமரான டத்தோஸ்ரீ அன்வாரை சிறையில் தள்ளியிருக்கும் நீதிமன்ற முடிவானது அரசாங்கத்தின் செல்வாக்கின் பேரில் செய்யப் பட்டதாகும் என்று டாக்டர் மகாதீர் குற்றஞ்சாட்டினார். அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவருக்கு எதிராக நடைபெற்ற வழக்கில் நியாயமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வில்லை. அதன் காரணமாகவே அவர் சிறைக்கு தள்ளப்பட்டார். அடுத்து வரக்கூடிய அரசாங்கம் சிறையில் இருக்கும் அன்வாருக்கு முழு மன்னிப்பு கோரி மாமன் னருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்மூலம் அவர் மறுபடியும் தீவிர அரசியலில் பிரவேசிக்க முடியும். இதன் வாயிலாக அவரை நான் பிரதமராக கொண்டு வர முடியும் என்று பிரிட்டன் நாட்டின் முன்னணி நாளேடான 'த கார்டியன் டுடே'விற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பெர்சத்துக் கட்சியின் தலைவரான மகாதீர் இதனை தெரிவித்தார். அவர் மறுபடியும் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதில் எனக்கு எந்த ஓர் ஆட்சேபனையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.ஓரினப் புணர்ச்சி செயல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கடந்த 1998ஆம் ஆண்டு அம்னோவிலிருந்தும் துணைப் பிரதமர் பதவியிலிருந்தும் துன் மகாதீர் பதவி நீக்கம் செய்தார். 1981ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக விளங்கிய டாக்டர் மகாதீர், இவ்வாண்டு முற்பகுதி யில்தான் டத்தோஸ்ரீ அன்வாரை நேரில் சந்தித்து பேசினார். தற்போது சிறையில் இருக்கும் அன்வார், அரசியல் பழிவாங்கும் படலத்தில் பலிகடா ஆகியுள்ளார். எனவே, அடுத்து அமையக் கூடிய புதிய அரசாங்கம் அவருக்கு அரச மன்னிப்பை வாங்கித் தர வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டார். அன்வாருக்கு எதிரான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் அரசு தரப்பு வழக் கறிஞர் குழுவிற்கு தலைமை ஏற்ற வழக்கறிஞரான டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லாவிற்கு 95 லட்சம் வெள்ளி கட்டணமாக வழங்கப்பட்டதாக அண்மையில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. குறிப்பாக, அன்வாரை சிறையில் தள்ள வேண்டும் என்ற நோக்கில் சட்டத்துறை அலுவலகம் சார்பாக நாட்டின் முன்னணி வழக்கறிஞரான ஷாபி அப் துல்லா அவ்வழக்கில் வாதாடினார்.கடந்த ஜூன் 9ஆம் தேதி ஷாபி அப்துல்லாவிற்கு எதிராக கூறப் பட்டுள்ள அந்த குற்றச்சாட்டுக்கு அவர் இதுவரை பதில் அளிக்க வில்லை. அந்த 95 லட்சம் வெள்ளி பணத்தை ஷாபி அப்துல்லாவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வழங்கியதாக கடந்த மே 31ஆம் தேதி சரவா ரிப்போர்ட் அம்பலப் படுத்தியதாக பத்திரிகை தகவல் கள் கூறுகின்றன. அன்வார் சிறையில் தள்ளப் பட்டது அரசியல் நோக்கத்தை கொண்டது என்று மனித உரிமை கழகமும் குற்றம் சாட்டியது. அன்வாரை தமக்கு அடுத்து பிரதமராக கொண்டு வராமல் போனது தாம் செய்த மிகப் பெரிய தவறு என்று டாக்டர் மகாதீர் அந்த முன்னணி நாளேட்டிற்கு மனம் திறந்து பேசியதுடன் தன் தவற்றையும் ஒப்புக்கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்