ஆர்.குணா கோலாலம்பூர், துணைக் காவல்படை பட்டமளிப்பு விழா நேற்று மஇகா நேதாஜி மண்டபத்தில் விமரிசையாக நடத்தப்பட்டது. மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் இந்த பட்டமளிப்பு விழாவினை அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார். HRDF, மஇகா, போலீஸ் படை, போலீஸ் கூட்டுறவு ஆகிய தரப்புகள் கூட்டாக உருவாக்கிய பயிற்சித் திட்டம் இது. இந்த துணை காவல் படையில் சேர்வ தற்கு சில அடிப்படைத் தகுதிகளை அமைச்சர் சுட்டிக்காட்டினார். உடல் ரீதியில் ஒருவர் திடகாத்திரமாக விளங்க வேண்டும். குற்றச்செயல் பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும். எஸ்.பி.எம். பகாசா மலேசியாவில் கிரெடிட் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய பயிற்சித் திட்டம் பயிற்சியில் கலந்துகொண்டு பட்டம் பெற்றவர்களுக்கு தொழில் ரீதியில் இதர பல வாய்ப்புகள் கிட்டுவதற்கு உறுதுணையாக இருக்கும். பயிற்சி முடித்தவர்களின் எண்ணிக்கை 256. பெற்றோர்கள், பயிற்சியில் பங்கேற்றவர்கள் ஆகியோர் திரளாக கலந்துக்கொண்ட இந்த பட்டமளிப்பு விழா அனைவரது கவனத்தையும் கவர்ந்த ஒன்றாக விளங்கியது. குற்றவாளியை பிடித்து போலீசில் ஒப்படைக்கும் அதிகாரம் துணைக் காவல் படையிடம் உள்ளது. கிடுக்குப்பிடி விசாரணை செய்யவோ அல்லது சம்மன் வழங்கவோ முடியாது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம் சுட்டிக் காட்டினார். பட்டமளிப்பு விழாவில் புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் புலன் விசாரணை பிரிவின் துணை இயக்குநர் டத்தோ தஜுதின் முகமட் ஈசா சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விரிவாக விவரித்தார். துணைக் காவல்படை உட்பட ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள பொறுப்பினை இவர் எடுத்துரைத்தார். இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச் சர் டத்தோ சரவணன், மஇகா தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ், மனிதவள மேம்பாட்டு நிதியகத்தின் (எச்.டி.ஆர்.எப்.) தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ விக்னேஸ்வரன் உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்