கோலாலம்பூர், தனது எண்ணெய் நிலையங்களில் வாடிக்கையாளர்களை வரவேற்பதைப் போல் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் கட் - அவுட் விளம்பரத்தை ஷெல் மலேசியா எண்ணெய் நிறுவனம் நேற்று அகற்றியது. மனித உயர விளம்பர அட்டையிலான அந்த கட்- அவுட்டில் தோன்றியிருக்கும் மலேசியப் பெண்ணை, கட்டியணைப்பது போலவும் முத்தமிடுவது போல வும் சில ஆண்கள் செய்துள்ள சேட்டைகள் சமூக வலைத்தளங் களில் பரவலாக பதிவிறக்கம் செய்யயப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. இதனால் ஏற் பட்டுள்ள அசௌகரியத்தை கருத்தில் கொண்டு ஷெல் மலேசிய நிறுவனம் இம்முடிவை செய்துள்ளதாக அது அறிவித்துள்ளது. மலேசியாவில் முன்னணி எண்ணெய் நிறுவனமான ஷெல், நாடு முழுவதும் 950க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்களை கொண்டுள்ளது. வாடிக்கை யாளர்களை அன்புடன் உபசரிக்கும் நோக்கில்தான் 25 வயதுடைய நூர் ஷாஃபில்லா வின் கட் அவுட்டை எண்ணெய் நிலையங்களில் வைத்துள்ளது. ஷெல் உடையில் காணப்படும் ஆள் உயர அந்தப் பெண்ணின் கட் அவுட்டை கட்டி ப்பிடிப்பது உட்பட சில ஆபாச தன்மையிலான சேட்டைகளை அண் மைய காலமாக புரிந்து வருகின்றனர் என்பதை அவர்கள் பதிவிறக்கம் செய்து ள்ள சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் படங்களின் மூலம் அறிய முடிகிறது. பெரும்பாலான முஸ்லிம்கள் வாழும் நாட்டில் இது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. நமது பண்பும் அல்ல. எனவே கலாச்சார தன் மைக்கு முரணாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் இனியும் அனுமதிக்கக்கூடாது என்ற நோக்கிலே அந்தப் பெண்ணின் கட் - அவுட் விளம்பரம் அகற்றப் படுவதாக ஷெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்