கோல திரெங்கானு ஏறக்குறைய வெ.22,000 மதிப்புடைய 2,200 போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த 18 வயதுமிக்க இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய் யப்பட்ட இளைஞரைக் கடந்த 2 மாதங்களாக உளவு பார்க்கப்பட்டதன் பின் கோல திரெங்கானு காவல்துறையின் தலைமையகத்தின் போதைப்பொருள் விசாரணைப் பிரிவு இங்குள்ள கம்போங் பாதினில் உள்ள வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக கோல திரெங்கானு காவல் துறையின் துணைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சுபியான் சுலைமான் தெரிவித்தார். சோதனை நடவடிக்கையின்போது அந்த இளைஞர் உறங்கிக் கொண்டிருந்ததோடு போதைப்பொருள் மாத்திரைகள் அடங்கிய பிளாஸ்டிக் பை கட்டிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது. இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொள்ள வில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் மீது இதுவரையில் எவ்வித குற்றப் பதிவும் இல்லை என்ற காரணத்தாலும் அவர் வெறும் விநியோகிப்பாளராக மட்டும் இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அந்த இளைஞரின் தலைவரை அடை யாளம் கண்டுவிட்டதாகவும் தற்போது அவரை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்