ஆறுமுகம் பெருமாள் சிப்பாங், சென்னையிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த ஆடவனை சோதனையிட்ட கே.எல்.ஐ.ஏ சுங்கத்துறையினர் அவனிடமிருந்து வெ.3 லட்சத்து 60 ஆயிரத்து 500 மதிப்புடைய 5.15 கிலோ கிராம் போதைப் பொருளை மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நேற்று கே.எல்.ஐ.ஏ சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது விளக்கமளித்த கே.எல்.ஐ.ஏ சுங்கத் துறையின் தலைமை இயக்குனர் டத்தோ. ஹம்சா பின் சுண்டாங், நேற்று முன்தினம் ஜூலை 4ஆம் தேதியன்று காலை 7.10 மணியளவில் எம்.எ. எஸ் சிற்கு சொந்தமான எம்.எச் 0181 விமானத்தின் மூலமாக சென்னையிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த 55 வயது டைய ஆடவனின் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறையினர் அவ்வாடவனின் துணிப் பையை சோதனையிட்டதாக கூறினார். இச்சோதனையின்போது புதிய துணிகளைக்கொண்ட பையின் அடிப்பகுதியில் உள்ள பிரத்தியேக பகுதியில் மேற்கண்ட மெத்தபெத்தாமின் வகை போதைப் பொருள் மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்த டத்தோ ஹம்சா இப்போதைப்பொருள் உள்நாட்டில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது என விசாரணையின் மூலமாக தெரிய வந்துள்ளது என தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்