img
img

வாக்காளர்களின் பெயர், முகவரிகள் வேறு தொகுதிக்கு மாற்றி மோசடி.
வியாழன் 06 ஜூலை 2017 13:56:55

img

நிபோங் திபால், ஜூலை 6- வாக்காளர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களின் பெயர், முகவரியை ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு மாற்றப்பட்ட விவ காரம் தொடர்பில், பாதிக்கப் பட்ட வாக்காளர்கள் நேற்று முன்தினம் போலீசில் புகார் செய்தனர். நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள இந்திய வாக் காளர்களை வீடு வீடாகச் சென்று சந்தித்த சில தரப்பினர் உங்களுக்கு உதவிப் பொருட் களை வழங்குகிறோம் எனக் கூறி அவர்களின் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு, இந்த மோ டியை செய்த கும்பலின் நடவடிக்கை அம்பலத்திற்கு வந்துள்ளது. நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தங்களின் பெயர், பத்துகவான் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து பிறை சட்டமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்ததாக ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லீப் சீ தெரிவித்தார். இதுவரையில் நிபோங் திபால் வட்டாரத்தில் 40 வாக்காளர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் உயரலாம் என நம்புவதாக அவர் கூறினார். தேசிய முன்னணிக்கு ஆதரவான சில கட்சிகள், அரசு சாரா இந்திய இயக்கங்கள் இந்த நடவடிக்கையில் மும் முரமாக செயல்பட்டு வருகின்றது. வாக்காளர்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென அவர் கேட்டுக் கொண்டார். போலீசாரும், தேசிய பதிவி லாகாவும் உடனடி விசா ரணை தொடங்க வேண்டுமெனக் கோரி, பாதிக்கப்பட்ட 40 வாக்காளர் களில் 27 பேர், நம்பிக் கைக் கூட்டணியின் நிபோங் திபால் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் டத்தோ மன்சோர் ஒஸ்மான், ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லீப் சீ, பிறை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் பி.இராமசாமி ஆகியோருடன் சென்று தென் செபராங் பிறை, சுங்கை ஜாவி போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தனர். கடந்த சில தினங்களாக தென் செபராங் பிறை வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பரவிக் கொண்டிருக்கும் விவகாரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img