img
img

காப்பாரில் பாராங்கத்திகளுடன் முகமூடி கும்பல் அட்டூழுயம்.
வியாழன் 06 ஜூலை 2017 13:30:30

img

பி. எம். குணா காப்பார், தாமான் காப்பார் ஜாலான் கூ கெக் கெங்கில் உள்ள வீட்டில் நேற்று அதிகாலை 2.00 மணியளவில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் இந்திய லோரி ஓட் டுனரை சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவத்தால் அக்குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கால்களிலும், கையிலும் ஆழமான வெட்டுக் காயங்களுக்குள்ளான கன்னியப்பன் மொட்டையன் (வயது 51) கிள்ளான் ஸ்ரீ கோத்தா தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட வீட்டில் மூன்றாவது முறையாக இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது. இதற்கு முன்னர் வெளியில் இருந்த இரும்புப் பொருட்களை மட்டுமே கொள்ளைப் போயின. இந்த முறை வீட்டினுள் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. பளபளக்கும் பாராங்கத்திகளுடன் வீட்டின் முன் புறமாக நுழைந்ததாக நம்பப்படும் ஐந்து முகமூடி கொள்ளையர்கள் துணியால் கன்னியப்பனையும், அவ ருடைய 68 வயது தாயார் அலமேலு சுப்ராயனையும் கட்டிப் போட்டதாக தெரிய வருகிறது. அந்த முகமூடி கொள்ளையர்கள் அத்துடன் விடுவதாக இல்லை. ஆறு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான கன்னியப்பனை படுக்கையில் தள்ளி பாராங்கத்தியால் கடுமையாக தாக்கினர். அவருடைய கால் களிலும், கையிலும் பீறிட்ட இரத்தம் படுக்கையில் சிதறியது. இந்த சம்பவத்தின் போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவருடைய 45 வயது மனைவி மாதா மருதமுத்து, 13,14,18,20 வயதுடைய மகள்கள் திடுக்கிட்டு அலறியதாக தெரிய வருகிறது.கூர்மையான பாராங்கத்தி முனையில் புதிதாக வாங்கிய 3,500 வெள்ளி மதிப்பிலான கைத்தொலைப்பேசி, 20 பவுன் நகைகள், ரகசிய புகைப்பட கருவி, அதன் பதிவுப் பெட்டி, ஆகியவற்றை கொள்ளையர்கள் சூறையாடினர். வீட்டின் முன் இருந்த மூன்று கார்களில் சாகா ரகக் காரை அந்தக் கொள்ளையர்கள் களவாடினர். கன்னியப்பனின் கனரக லோரியை களவாட முயன்ற கொள்ளையர்கள் அதை மேலும் இயக்கமுடியாமல் அக்குடியிருப்பின் சாலை வளைவிலேயே விட்டுச் சென்றனர். இருந்தும் சம்பந்தப்பட்ட கனரக லோரி, இரண்டு கார்கள் சாவிகளையும், அக்குடும்பத்தின் கைத்தொலைப்பேசிகளையும், அணிந்திருந்த நகைகளையும் அந்த முகமூடி கும்பல் விட்டு வைக்க வில்லை. வீட்டில் இருந்த சுமார் 50 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான பொருட்கள் இந்த சம்பவத்தில் கொள்ளைப் போனதாக கௌரி கன்னியப்பன் (வயது 20) விவரித்தார். இதனிடையே, இந்த சம்பவத்தை உறுதிபடுத்திய வட கிள்ளான் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரி ஏஎஸ்பி முகமட் குஸாய்ரி, இந்த சம்பவத்தை போலீஸ் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார். தொடக்கக்கட்ட புலன் விசாரணையில் போலீஸ் இச்சம்பவத்தை கொள்ளை என வகைப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். நேற்று நண்பகல் 12.00 மணியளவில் சம்பந்தப்பட்ட வீட்டில் தடயவியல் போலீசார் சோதனை நடத்தினர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img