தமிழ்ச்செல்வி மலாக்கா, அலோர்காஜா தமிழ்ப்பள் ளியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவி ரம்யாரூ பாவை (வயது 8) முதுகுப் பகுதியில் பிரம்பால் அடித்த பள்ளித் தலை மையாசிரியர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அம்மாணவியின் தாயார் தமிழ்ச் செல்வி (37) கூறினார்.80 பக்கங்கள் கொண்ட நோட்டுப் புத்த கத்தை கிழித்து அதில் சில பக்கங்கள் மட்டுமே வைத்திருந்ததற்காக தன் மகளை தலைமையாசிரியர் அடித்து முதுகுப் பகுதியில் இரத்த கட்டும், சதை வீக்கம் வரும் வரை அடித்தற்காக தான் மிகவும் கவலை கொள்வதாக கூறினார். கடந்த 22.6.2017 பள்ளி முடிந்து வீடு திரும்பிய தனது மகள் முதுகு வலிக்கிறது என கூறியபோது அவரது சட்டையை கழிற்றி பார்த்த போது பிரம்பால் அடித்த காயமும் இரத்த கசிவும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாக தெரிவித்தார். பிறகு பள்ளிக்குச் சென்று பொறுப்பாசிரியரிடம் புகார் கொடுத்த தாகவும் கூறினார். தனக்கும் அப்பள்ளி தலைமையாசிரியருடன் நடந்த பேச்சு வார்த்தையில் தனக்கு மனதிருப்தி இல்லாததால் அலோர்காஜா காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததுடன் பிறகு அலோர்காஜா மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர் முதுகு தண்டுப்பகுதியில் சிறு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறியதாக தமிழ்ச்செல்வி தெரிவித்தார். தனது மகளை கண்டிப்பதை தவறு என கூறவில்லை ஆனால் பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கு தெரிவியுங்கள் எனக் கூறியும் தலைமை யாசிரியர் கண்டிப்பு என்ற போர்வையில் பிள்ளைகளிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது என தமிழ்ச்செல்வி கூறினார். ரம்யாருபா தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து 4/7/2017 செவ்வாய்க்கிழமை மலாக்கா பொது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு பரி சோதனையில் அம்மாணவியின் முதுத்தண்டு முறிவு இல்லை என்றும் முதுகுப் பகுதியில் தசை வீக்கம் ஏற்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்