img
img

கடல் மண் அரிப்பினால் ஆபத்தில் ஜெரம் கடற்கரை. இரு ஆலயங்கள் பாதிக்கப்படும்.
புதன் 05 ஜூலை 2017 14:40:55

img

பி. எம். குணா ஜெரம், அருள்மிகு ஸ்ரீ கங்காதரர் ஆலயமும், அருள்மிகு ஸ்ரீ கருப்பையா ஆலயமும் அமைந் துள்ள ஜாலான் கோலசிலாங்கூர் 16 ஆவது மைல் ஜெரம் பந்தாய் ரெமிஸ் கடற்கரையில் மண் அரிப்பு தடுப்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளது குறித்து அவ்விரு ஆலயங்களின் நிர்வாகத்தினர் ஏமாற்றம் தெரிவித் துள்ளனர். நோன்புப் பெரு நாளுக்கு முன்பே ஆரம்பிக்கப் பட்ட நீர்ப் பாசன வடிக்கால் துறையின் மண் அரிப்பு தடுப்புப் பணிகள் சம்பந்தப்பட்ட ஆல யங்கள் அமைந்துள்ள கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படாதது ஏன் என்று ஆலய நிரந்தர தக்கார் வாம தேவ சிவம் நா.குணசேகர் குருக்கள் கேள்வி எழுப்பினார். சம்பந்தப்பட்ட கடற்கரை மண் அரிப்பு தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு பேரலைகள் எழுவதாகவும் அமாவாசை பௌர்ணமி காலங்களில் பேர லைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் அவர் சொன்னார். கடந்த 6 மாதங்களில் கடல்மண் அரிப்பு கடுமையாகி யுள்ளது. சுமார் 50 மீட்டர் அள வுக்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ள தாகவும் அவர் விவரித்தார். ஒவ்வோர் ஆண்டும் ஆடிப் பெருக்கின்போது தற்சமயம் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் 40 அல்லது 50 தற்காலிகக் கடை கள் அமைக்கப்படும். ஆனால் இந்த தடவை 3-8-2017 ஆம் நாள் 102 ஆம் ஆண்டு ஆடிப் பெருக்கின்போது தற்காலிகக் கடைகள் அமைப்பதற்கு ஆலய நிர்வாகம் பெரும் பிரச் சினையை எதிர்நோக்கியுள்ளதாக ஆலய துணைச் செயலாளர் தட்சணா மூர்த்தி குணசேகர் (வயது 24) தெரிவித்தார். கடல் மண் அரிப்பால் ஆலயத் திற்கு வருவதற்கு பக்தர்களுக்கு முறையான பாதை இல்லை.கடல் மண் அரிப்பு தடுப்புப் பணிகள் ஆலயத்திற்கு முன் மேற்கொள்ளப்படாதது குறித்து பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த 25-7-2016 ஆம் நாள் ஆலயம் அமைந்துள்ள கடற்கரை பகுதி யில் மண் அரிப்பு தடுப்புப் பணி கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சிலாங்கூர் நீர்ப் பாசன வடிக்கால் துறையிடம் கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால், சுமார் 50 மில்லியன் மதிப்பிலான அந்தப் பணிகள் ஆலயம் அமைந் துள்ள பகுதிக்குள் வராமல் பாதியிலேயே நின்று போனது ஏமாற்றம் தருகிறது என்று ஆலய துணைத் தலைவர்- காந்தி அழகுமலை (வயது 53) தெரிவித்தார். கடந்த 18-9-2016 ஆம் நாள் ஏற்பட்ட மோசமான கடல் பெருக்கிற்குப் பின்னர் அக்கடற் கரையில் மண் அரிப்பு தொடர்ந்து மோசமடைந்து வரு கிறது. கோலசிலாங்கூர் மாவட்ட நீர்ப் பாசன வடிக்கால் துறையும் கோலசிலாங்கூர் மாவட்ட மன்றமும் வரும் ஆடிப் பெருக்கின் போது ஆலய நிர்வா கத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தாங் கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப் பிட்டார். முறையான சாலை வசதிகள் இல்லாததால் ஆல யத்திற்கு வரும் சரக்குந்துகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பக்தர்களின் வாகனங்கள் மணலில் சிக்கிக் கொள்கின்றன. அதனை களைய ஆலய நிர்வா கம் அரசாங்க உதவியைத்தான் அதிகம் எதிர்பார்ப்பதாக ஆலய நிர்வாக ஆலோசகர் மணிமாறன் ராமையா (வயது 49) தெரிவித்தார். 18-9-2016 ஆம் நாள் ஏற் பட்ட கடல் கொந்தளிப்பை தொடர்ந்து தாக்கிய கடல் பெருக்கால் கடலோர சவுக்கு மரங்கள் அழிவுற்றன. தற்சமயம் வனத் துறை சவுக்கு மர செடி களைப் பயிரிடும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் அவ்விரு ஆலயங்களும் ஆடி 18 விழாவிற்கு கீர்த்தி வாய்ந்த ஆலயங் களாக திகழ்வதால் உரிய பாதைகள் அமைக்கப்பட்டு, மணல் அரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று ஆலய பொரு ளாளர் ஏழுமலை (வயது 66) தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img