கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை"யாகவே மலேசிய இந்தியர்களின் தார்மீக உரிமைகளும் அரசியலமைப்பு ரீதியிலான வாய்ப்புகளும் பறிக்கப்பட்டு வருவதற்கு உடந்தையாகவும் செயலற்றவர்களாகவும் இருந்துவரும் 70 ஆண்டுகால பாரம்பரிய அரசியல் பிரதிநிதித்துவத்தால் இனியும் இழப்பதற்கு ஏதாவது உள்ளதா என்பதே இன்றைய கேள்வியாகும். *அரசாங்கக் குத்தகைகள் முழுமையாகப் பறிபோயுள்ளன. *மாவட்ட மன்றங்களில் சிறு சிறு குத்தகைகளும் மனச்சாட்சி இல்லாமல் அபகரிக்கப்பட்டுள்ளன. *பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் வேலைகளையும் அந்நியரிடம் பறிகொடுத்துள்ளோம். *பள்ளிகளில், மருத்துவமனைகளில், அரசாங்க அலுவலகங்களில், அரசாங்க கல்லூரிகளில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் வணிகம் செய்யும் வாய்ப் புகளும் மரணித்துள்ளன. *அரசாங்க அலுவலகங்களுக்கு தேவையான உபகரணங்களை விநியோகம் செய்யும் வர்த்தக வாய்ப்புகளுக்கும் விடை கொடுக்கப்பட்டுள்ளது. *அரசாங்க வேலை வாய்ப்புகளுக்கும் முழுமையாக கதவடைக்கப்பட்டிருக்கின்றது. *சாலை ஓரங்களில் வயிற்றுப் பிழைப்பிற்காகச் செய்யப்படும் வியாபாரங்களுக்கும் தடா போடப்பட்டுள்ளது. நெஞ்சில் கை வைத்துச் சொல்ல வேண்டுமானால் நாம் முன்னோடியாக இருந்து பெற்ற சுதந்திரம் கடந்த 60 ஆண்டுகளில் அனைத்தையும் பறித்துக் கொண்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாக ஏவுகணை கருதுகின்றது. இந்திய மாணவர்களுக்கான உரிமை கிடைக்குமா? மலேசியாவின் சட்டப்பூர்வமான குடிமக்களாக இருந்து வரும் இந்தியர்களின் கல்வி உரிமை முழுமையாக அடகு வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு யாருமே இன்றுவரை பதில் கூற விரும்பவில்லை. ஏவுகணை கேட்டிருந்த கேள்விகளுக்கு இன்றுவரை பதில் தருவதற்குத் தகுதியான அரசியல் பிர முகர்களும் இல்லை என்பதை அறிவதற்குச் சங்கடமே ஏற்படுகின்றது. *2016ஆம் ஆண்டில் எத்தனை மாணவர்களுக்கு அரசாங்க உபகாரச் சம்பளங்கள் கிடைத்தது? *பல்கலைக்கழகம் ரீதியிலாக எத்தனை இந்திய மாணவர்கள் உபகாரச் சம்பளங்களைப் பெற்றுள்ளனர்? *வெளிநாடுகளில் பயில்வதற்கான உபகாரச் சம்பளங்களைப் பெற்றிருக்கும் இந்திய மாணவர்கள் யாவர்? * பொதுச்சேவைத் துறையைத் தவிர உபகாரச் சம்பள ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ள பிற அமைச்சுகளின் உபகாரச் சம்பளங்கள் எத்தனை இந்திய மாணவர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது? *அரசாங்க உபகாரச் சம்பள வாய்ப்புகள் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானா? *உபகாரச் சம்பளங்கள் தொடர்பான விவரங்கள் இரகசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ளதா? போன்ற கேள்விகளைக் கேட்டு ஏவுகணைக்கு அலுத்து விட்டது. எந்தக் கேள்விகளுக்கும் பதில் கூற வேண்டிய கட்டாயம் இல்லாத சூழலில் எல்லா கேள்விகளுக்கும் மௌனம் ஒன்றையே பதிலாகக் கொடுத்துவரும் இந்தியர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இனியும் நம்ப வேண்டுமா என்பதே ஏவுகணையின் வாதமாகும். எங்கே எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகள்? கடந்த சில தினங்களாக ஏவுகணை மலேசிய இந்தியர்களின் அடுத்த தலைமுறையினரின் உயர்கல்வி உபகாரச் சம்பளங்கள் தொடர்பான விவகாரத் தினை முன்னிலைப்படுத்தி எழுதி வரும் நிலையில் எவ்விதமான சலனமும் இல்லாமல் மௌனிகளாகவே இருந்து வரும் எதிர்க்கட்சி இந்திய அரசியல் வாதிகளின் இலக்கின் மீது சந்தேகமே வருவதை மலேசிய இந்தியர்கள் அனைவரும் உணர வேண்டும். இந்திய மாணவர்களுக்கான அரசாங்க உபகாரச் சம்பளம் உரிமை தொடர்பான விவகாரமாகும். ஆனால் இவ்விவகாரம் தொடர்பில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்குச் சரியான பதில் கிடைக்கும் என்பது சந்தேகமே. கடந்த 60 ஆண்டுகளாக தேர்தல் காலங்களில் மட்டுமே எதிர்க்கட்சி இந்தியர் அரசியல் பிரதிநிதிகள் இந்தியர் உரிமைகள் தொடர்பில் தனி மனித சாடல் களின் வழியும், தனி மனிதர் சார்ந்த விவகாரங்களை பூதாகரமாக உருவாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரும் ‘ஜிகிர்தாண்டா’ அரசியல் நட வடிக்கைகளையும் மலேசிய இந்தியர்கள் உணர வேண்டும் என்பதை ஏவுகணை வலியுறுத்துகின்றது. அரசாங்கம் 2017ஆம் ஆண்டிற்காக பட்ஜெட் வழி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் வெ. 4.301 பில்லியன் (வெ. 430.1 கோடி) ஒதுக்கீட்டில் எத்தனை இந் திய மாணவர்கள் பயனடைவார்கள் என்ற கேள்வியை எதிர்க்கட்சியைச் சார்ந்த இந்திய அரசியல்வாதிகள் கேள்வி கேட்கக் கூடாதா? நாட்டிலே சமூக உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அரசு சாரா இயக்கங்களும் ஏன் மௌனராகம் வாசிக்கின்றன? மலேசிய இந்தியர் சார்ந்த அனைத்து விவகாரங்களும் எவ்விதமான தீர்வும் இல்லாமல் ‘செய்தியாகவே’ மடிந்து விடுவதன் மர்மம் என்ன? மலேசியாவில் உயர்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக இழந்து வரும் இந்திய மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளங்களின் வழி ஓரளவு வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையிலும் பாராங் கல்லைத் தூக்கிப் போட்டிருக்கும் செயல்பாடுகளுக்கு இன்றுவரை விளக்கம் தரப்படவில்லை. மலேசியக் கல்வியமைச்சின் துணைக்கல்வியமைச்சரும், மஇகாவின் கல்விக்குழுத் தலைவருமான டத்தோ ப.கமலநாதன் இந்திய மாணவர்களின் உயர் கல்வி உபகாரச் சம்பளம் தொடர்பில் முழுமையான விளக்கத்தினை விரைவில் தர வேண்டும் என்பதே ஏவுகணையின் எதிர்பார்ப்பு ஆகும். செபராங் பிறை போலிடெக்னிக் கல்லூரி சிற்றுண்டிச் சாலை விவகாரம் தொடர்பில் வில்லென வீறிட்டவர் இந்திய மாணவர்களின் கல்வி உரிமைகள் தொடர்பில் இன்னமும் மௌனமாக இருப்பது நியாயமா என ஏவுகணை கேட்க விரும்புகின்றது. மர்ம முடிச்சுகள் இவ்விவகாரம் தொடர்பில் தொடரா மல் இருக்க நிறைவான தீர்வினை நாளை ஆராய்வோம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்