ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தான் காவல் நிலையத்தின் கண்ணாடி கதவை உடைத்ததற்காக பி. சிவத்திற்கு (வயது 39) ஓராண்டுச் சிறை தண்டனையை இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த வழக்கின் குற்றப் பத்திரிகை நீதிபதி சித்தி சல்வா ஜாபார் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை சிவம் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி சிவம் கைது செய்யப்பட்ட நாள் முதல் அவரின் தண்டனைக் காலம் ஆரம்பமாவதாக நீதிபதி உத்தரவிட்டார். சம் பந்தப்பட்ட காவல் நிலையத்தின் கண்ணாடி கதவை அவர் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி இரவு 10.15 மணியளவில் உடைத்துள்ளார். இதனால் வெ.500 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆறு பிள்ளைகளுக்கு தந்தையான சிவம், சம்பவத்தன்று குடிபோதையில் கண்ணாடிக் கதவை மோதியதால் அது உடைந்தது என கூறப்படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்