img
img

போலீசாருக்கு சவால் விடுவதா? தொடர் கொள்ளைச் சம்பவங்கள்.
புதன் 05 ஜூலை 2017 12:49:47

img

ம. யோகலிங்கம் - பி.எம்.குணா கோலசிலாங்கூர், போலீசாருக்கு சவால் விடும் வகையில் இங்கு சுங்கை டாராவில் தொடர் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கணவன்மார்கள் வேலைக்குச் சென்றவுடன் பட்டப்பகலில் வீட்டிற்குள் ஆயுதத்துடன் நுழைந்து கொள்ளையிடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். அப்படியே புகார் செய்தாலும் துரித நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் புக்கிட் அமானின் போலீஸ் உதவியை நாடியுள்ளனர் கம்போங் சுங்கை டாரா மக்கள். இங்கு குடியேறி மூன்று மாதங்களே நிம்மதியாக வாழ்ந்ததாக கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணமான அமுதா முனுசாமி குமுறினார். குடியிருப் பின் செம்பனை காடு களில் கும்பல் கும்பலாக கொட்ட மடிக்கும் போதை பித்தர்களால் மக்கள் நிம்மதி இழந்து தவிப்ப தாக கம்போங் சுங்கை டாரா கிரா மத் தலைவர் பகாருடின் ஒஸ் மான் (வயது 56) கவலைப்பட்டார். கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகத்திலும், பத்தாங் பெர்சுந்தை போலீஸ் நிலையத்திலும் புகார்களுக்கு மேல் புகார்கள் செய்யப்பட்டுள்ள போதிலும் பிரச்சினைகளை தன் னால் சமாளிக்க முடியவில்லை என்று கோலசிலாங்கூர் மாவட்ட தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் செயற் குழு உறுப்பினருமான அவர் வேதனைப்பட்டார். மோட்டார் சைக்கிள்களில் கூட்டம் கூட்டமாக வந்து போகும் அடையாளம் தெரியாத நபர்கள் இந்தியர்களும், மலாய்க்காரர்க ளும் அதிகம் வாழும் இந்த கிரா மத்தை போதைப் பித்தர்களின் சொர்க்க புரியாக உருமாற்றி விட்டதாக அங்குள்ள இளைஞர்கள் ஆவேசப்பட்டனர். பகலிலும், இரவிலும் இதனால் மக்கள் நிம்மதியின்றி தவிப்பதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் போதைப் பித்தர்களின் கைவரிசை யால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள தாகவும் பன்னீர்செல்வம் ஆறுமுகம் (வயது 30) தெரிவித்தார். கொள்ளைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பத்தாங் பெர்சுந்தை போலீஸ் நிலையத் தில் ஒவ்வொரு முறையும் புகார் செய்கின்றனர். ஆனால், அந்த ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட வீடுகளில் புகைப் படங்களை பதிவு செய்யும் போலீசார், அதன் பின்னர் என்ன நடவடிக்கைகள் எடுத்தனர் என்பது அந்த குடும்பங்களுக்கு தெரியாது. குடியிருப்புவாசிகள் ஒத்துழைப்பு வழங்கிய போதிலும் போலீசாரின் நடவடிக்கை மன நிறைவளிக்கவில்லை என்று நாகராஜன் சகாதேவனும் (வயது 26), குமரேசன் பார்த்திபனும் (வயது 22) கூறினர். போலீசார் இங்கு மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கைக ளில் கூட ஈடுபடுவது கிடையாது என்று பன்னீர்செல்வம் ஆறுமுகம் முறையிட்டார். வீடுக ளில் கைவரிசை காட்டும் போதைப் பித்தர்கள் கால்நடைக ளையும் விட்டு வைப்பதில்லை. கடந்தாண்டு தன்னுடைய பட்டியில் இருந்த இரண்டு ஆடுகள் திருடுப் போனதாக மெல்வின் பிரான்சிஸ் (வயது 28) குறிப்பிட்டார். ஆனால், இந்த சம்பவம் போலீசிடம் முறையிடப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறிய அவர், வட்டார இளைஞர்கள் உதவியுடன் சம் பந்தப்பட்ட போதைப் பித்தரை வளைத்து பிடித்ததாக அவர் விவரித்தார். அந்த போதைப் பித்தரிடமி ருந்து இரண்டு ஆடுகளில் ஒர் ஆட்டை மட்டுமே மீட்க முடிந்ததாக மெல்வின் மேலும் தெரிவித்தார். இங்கு கூட்டம் கூட்டமாக கும்மாளமடிக்கும் போதை பித்தர்கள் துடைத்தொழிக்கப்படாவிட்டால் பத்தாங் பெர் சுந்தையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 500 இந்திய குடும்பங்கள் வாழும் கம்போங் சுங்கை டாரா போதை பித்தர்களின் உல்லாசத் தலமாக மாறிவிடும் என அக்கிராம மக்களும், இளைஞர்களும் எச்சரித்தனர். வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வேலைக்குச் சென்று பெரும்பாலும் மாலையிலோ, இரவிலோ திரும்புவதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு போதைப் பித்தர்கள் கைவரிசையைக் காட்டுவதாக ரோஹினியா பெரியநாயகம் (வயது 54), திருச்செல்வன் வேலாயுதம் (வயது 22), பரசுராமன் தர்ம ராஜா (வயது 31), பூபாலன் ராமசாமி (வயது 34), கலையரசன் குணசேகரன், பூபாலன் சந்திரன், பாக்கியம் முருகையா (வயது 80) ஆகியோர் தெரிவித் தனர். செம்பனைக் காடுகளுக்குள் கும்மாளமடிக்கும் போதை பித்தர்கள் வெளி வட்டாரங்களிலிருந்து கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் வருவதாக தெரிய வருகிறது. போதை பித்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து போகும் கம்போங் சுங்கை டாரா குடியிருப்புப் பகுதியில் 6 சாலைச் சந்துகள் (லோரோங்) இருப்பதால் அவர்கள் எந்த வழியில் குடியிருப்புக்குள் நுழைவார்கள் ? எந்த வழியில் வெளியேறுவார்கள் ? எந்த வீட்டின் பூட்டை உடைப்பார்கள் என்று தெரி யாது. மக்கள் அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத் தில் இருக்கும் போதும் அல்லது வெளியில் வேலைக்கு சென்றிருந்த வேளைகளிலும் ஆயுதத்துடன் வீட்டுக்குள் நுழைந்து போதை பித்தர்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர் என்று கிராமத் தலைவர் பகாருடின் ஓஸ்மான் (வயது 56) கூறினார். கடந்தாண்டு நோன்புப் பெரு நாள் காலத்தில் புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்புத் துறையினர் அதிரடியாக அந்த செம்பனைக் காட்டுக்குள் நுழைந்து 20 போதைப் பித்தர்களை கைது செய்தனர். மலாய்க்கார, இந்திய இளைஞர்கள் என போலீஸ் லோரியில் அவர்கள் அள்ளிச் செல்லப்பட்ட காட்சி குடி யிருப்புவாசிகளை கதிகலங்க வைத்தது. ஆனால், அதன் பிறகும் போதைப் பித்தர்களின் நடமாட்டமும், கொட்டமும் இங்கு ஓய்ந்தபாடில்லை. ஒவ் வொரு முறையும் உடைமைகளை இழந்து விட்டு என்னிடம் புகார் கொடுக்க வரும் மக்களுக்கு ஆறுதல் மட்டுமே சொல்ல முடிகிறது என்று கடந்த 2015 ஆம் ஆண்டு சுங்கை டாரா கிராமத் தலைவராக நியமனம் பெற்ற பகாருடின் ஓஸ்மான் மலேசிய நண்பனிடம் தெரிவித்தார். கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு, மூன்று போலீஸ் புகார்கள் அல்ல. பல புகார்கள் செய்யப்பட்ட போதிலும் போலீஸ் நடவடிக்கையில் குடி யிருப் புவாசிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை.கடந்தாண்டு பத்தாங் பெர்சுந்தை பெங்குலு தலைமையில் நடைபெற்ற செயற் குழு கூட்டத்தில் மேற்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அந்த விவரங்கள் கூட்டப் குறிப்பில் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார். பெங்குலு அலுவலக அளவிலும் மேற்பட்ட பிரச்சினைகள் போலீசாரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால், போலீசா ரின் நடவடிக்கையோ குடியிருப்புவாசிகளுக்கு இன்னும் ஏமாற்றமாகவே இருக்கிறது என்று கோலசிலாங்கூர் மாவட்ட தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் செயற்குழு உறுப்பினருமான பகாருடின் விவரித்தார். இந்திய குடியிருப்புவாசிகள் மட்டுமல்ல மலாய்க்கார குடியிருப்புவாசிகளும் மேற்பட்ட அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். இதனிடையே, மேற்பட்ட சம்பவங்கள் தொடர்பான புகார்தாரர்களின் விவரங்கள் ரகசியப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத் திய அவர், புகார் அளித்து விட்டு வீடு திரும்புவதற்குள் அந்த புகார்தாரர் யார் என கிராமத்திற்குள் எவ்வாறு பரவுகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த நிலை தொடருமானால் அந்த புகார் தாரரின் பாதுகாப்பை யார் உறுதி செய்வது என்றும் அவர் வினவினார். எடுத்துக் காட்டாக கம்போங் சுங்கை டாராவில் ரசாயன மூட்டை கள் குடியிருப்புப் பகுதியில் குவிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அகமட்டுடன் சென்று புகார் கொடுத்து விட்டு வீடு திரும்புவதற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு அந்தப் புகார் எட்டியது அதிர்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்ட பகாருடின் ஓஸ்மான், கோலசிலாங்கூர் மாவட்ட மன்றத்தில் எழுப்பப்பட்ட அந்த புகாரும் உடனே வெளியில் கசிந்தது மேலும் அதிர்ச்சியை தந்ததாக அவர் விவரித்தார். *கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் நடவடிக்கை மனநிறைவு அளிக்காததால் புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்புத் துறையின் உதவி நாடப் பட்டது. 2016 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாள் காலத்தின்போது சம்பந்தப்பட்ட செம்பனைக் காட்டு பகுதியில் அதிரடியாக இறங்கிய அத்துறையினர் 20 போதைப் பித்தர்களை லோரியில் அள்ளிச் சென்றனர். - பகாருடின் ஓஸ்மான் வயது 56, சுங்கை டாரா கிராமத் தலைவர் *மூன்று ஆண்டுகளாக தொடர் கொள்ளைச் சம்பவங்கள். கடந்த 6 மாதங்களில் ஆறு கொள்ளைச் சம்பவங்கள். *ஆறு ஆண்டுகளுக்கு முன் குடி வந்து போதைப் பித்தர்கள் அச்சுறுத்தலால் நிம்மதியின்றி தவிக்கும் மாது. மூன்றே மாதங்களே நிம்மதியாக வாழ்ந்த அமுதா முனுசாமி (வயது 33). கணவர் அதிகாலையில் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டின் பின்புற கதவின் பூட்டை பாராங்கத்தியால் வெட்டிய மர்ம ஆசாமிகள். போலீசாரை கைத் தொலைபேசியில் தொடர்பு கொள்வதைப் போல பாசாங்கு செய்ததால் போதை பித்தர்கள் என சந்தேகிக்கப்படும் அந்த மர்ம ஆசாமிகள் ஓட்டம் பிடித்தனர். - அமுதா முனுசாமி குடியிருப்புவாசி. *கம்போங் சுங்கை டாராவில் ஆறு சாலை சந்துகள் (லோரோங்) இருப்பதால் போதைப் பித்தர்கள் எந்த சந்தில் எப்படி நுழைவார்கள் ? எங்கு பதுங்கியிருப்பார்கள் என்று தெரியாது. *வீட்டிலுள்ள எரிவாயு உருளைகளை அடிக்கடி களவாடிச் செல்லும் போதை பித்தர்கள், வீட்டின் முன் வைக்கப்படும் தட்டு முட்டு சாமான்களையும் சுருட்டிச் செல்கின்றனர். *வீட்டின் வெளியே பூஜை மேடையில் உள்ள குத்து விளக்குகள் வெண்கல தட்டுகள் அடிக்கடி திருடு போகின்றன. *பெரும்பாலான மக்கள் வெளியில் வேலைக்கு சென்று விடுவதால் பகலில் கிராமமே ஆழ்ந்த அமைதியில் மூழ்கிவிடும். *பல பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும் வரும் நபர்கள் செம்பனைக் காடுகளில் கும்மாளமடிப்பது குடியிருப்புவாசிகளை அச்சத்தில் ஆழ்த்துகிறது. *கொள்ளைச் சம்பவங்கள் நிகழும் வீடுகளில் புகைப்படம் எடுப்பதோடு போலீசார் கடமையை முடித்துக் கொள்கின்றன. *மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கைக் கூட இல்லாததால் போலீசார் மீது அதிருப்தியடைந்துள்ள குடியிருப்புவாசிகள். *புகார்தாரர்களின் பெயர் விவரங்களை போலீசார் ரகசியப் படுத்துகின்றனரா? கொள்ளைச் சம்பவங்களையும் போதை பித்தர்களின் அட்டகாசத்தையும் போலீசாரிடம் புகார் கொடுத்தப் பின்னர், வீடு திரும்புவதற்குள் அந்த புகார்தாரரின் பெயர் விவரங்கள் கிராமத்திற்குள் எவ்வாறு பரவுகின்றன ? *பகல் வேளையில் பெரும்பாலான வீடுகளில் முதியவர்களே அதிகம் இருப்பதால் அவர்களுடைய பாதுகாப்பை போலீஸ் உறுதிப்படுத்துமா ?

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img