கோலாலம்பூர், உலகில் இன்று போட்டி நிறைந்த பெரும் துறையாக மாறியிருக்கும் அழகுராணிப் போட்டியில் நம்மவரில் ஒருவரான சரளாவும் சாதித்துவிட்டார். 2017 மலேசிய, ஆசிய அனைத்துலக மாபெரும் விருதை கடுமையான போட்டிகளின் நடுவே வெல்வதென்பது சாதாரணமல்ல. பெரும் சாதனை. இந்தியர் களைப் பெருமைப் படுத்தும் அவரது விருதிலும் வெற்றியிலும் இந்தியப் பெண்களுக்கு சொல்லும் பல செய்திகள் மறைந்திருக்கின்றன. நமது தோற்றம், நமக்குள்ள தன்னம்பிக்கை, மற்றவர்களுக்கு எவ்வாறு நாம் முன்னுதாரணமாக இருக்க முடியும், நம் நடை, உடை, பாவனை என அனைத்தையும் மைய மாக வைத்தே ஒருவரின் கவனத்தை ஈர்க்கிறார் என்கிறார் சரளா. எனவே மலேசிய நண்பன் அவருடன் நேர்காணல் செய்தது. அழகுராணி போட்டி என்றாலே முகம் சுளிக்கும் நமது சமுதாயத்தின் மத்தியில் சாதித்துக் காட்டியுள் ளார் ஒரு திருமதி. குடும் பத்தின் ஆதரவும், தன்னம் பிக்கையும் இருந்தால் எப்பேற்பட்ட சோதனைகளையும் சாதனையாக்கலாம் என்பதை சுலோகமாகக் கொண்டு, 2017 மலேசிய ஆசிய அனைத் துலக திருமதி அழகு ராணிப் போட்டியில் ஆற்றலை வெளிப்படுத்தும் பிரிவிலும், தன்முன் னைப்பு பிரிவிலும் வெற்றி வாகை சூடிய ஜி.சரளா வின் கதை இது. நமக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாத ஒரு முகம். ஆனால், சாதித்துக் காட்டிய நம்மவர்களில் இவரும் ஒருவர். கடந்த 2016-ஆம் ஆண்டில் மலேசிய இந்திய கலாச்சார திருமதி அழகு ராணி போட்டியில் பங்கேற்று பிரதான வெற்றியாளராக வாகை சூடினார்.அந்த வெற்றிக்குப் பிறகு, இந்தத் துறையில் மேலும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வருடம் நடைபெற்ற மலேசிய ஆசிய அனைத்துலக திருமதி அழகு ராணி போட்டியில் கலந்து கொண்டார். சீனர்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த அழகு ராணி போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்வான 15 பேரில் சரளாவும் ஒருவர்.இறுதிச்சுற்றுக்குத் தேர்வானதே பெரிய விஷயம். அதிலும் இரு துணை பிரிவுகளின் வெற்றியாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது பாராட்டப்பட வேண்டிய சாதனை என்றே சொல்ல வேண்டும். மலேசிய நண்பன் அலுவலகத்திற்கு நேற்று வருகை புரிந்த சரளாவுடன் நடத்தப்பட்ட நேர்காணலில் தமது அனுபவங்களை நண்பன் வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டார். இணையத்தளம் வழி இப்போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்தேன். நேர்காணலுக்கு சென்றபோது சீனப்பெண்களையே அதிகமாக காண முடிந்தாலும், எனக்குள்ள தன்னம்பிக்கை என்னை கைவிடவில்லை.பல பெண்கள் வெளி யேற்றப்பட்டனர். இறுதிச் சுற்றுக்கு 15 பேர் மட்டுமே தேர்வாகினோம். அவர்களில் நான் மட்டுமே இந்திய பெண் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும். நமது தோற்றம், நமக்குள்ள தன்னம்பிக்கை, மற்றவர்களுக்கு எவ்வாறு நாம் முன்னுதாரணமாக இருக்க முடியும், நம் நடை, உடை, பாவனை என அனைத்தையும் மையமாக வைத்தே நாம் தேர்வு செய்யப்படுகிறோம். இவற்றில் சிறந்து விளங்கிய காரணத்தினால்தான் இறுதிச்சுற்றுக்கு என்னால் நுழைய முடிந்தது. அங்கு எங்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. நாட்டின் பிரபலமான மாடல் அழகியான எம்பர் சியா அகாடாமியில் இப்பயிற்சி யில் நாங்கள் கலந்து கொண்டோம். அழகு என்றால் அது வெறும் வெளித்தோற்றம் மட்டுமல்ல. மனதை ஒருநிலைப் படுத்துதல், பேச்சாற்றல், மற்றவர்களுடன் பழகும் விதம், உடைகள் உடுத்தும் விதம், கேமரா முன் நாம் எப்படியெல்லாம் பேச வேண்டும், தோன்ற வேண்டும் என்று ஒவ்வொரு விஷயங்களிலும் கவனம் செலுத்தப் படுகிறது. சிறு வயதிலிருந்தே எனக்கு இதுபோன்ற விஷயங்களில் நாட்டம் அதிகமாகவே இருந்தது. ஏதோ வேலைக்குப் போனோம், வேலை முடிந்ததா வீட்டிற்கு வந்தோம் என்றில்லாமல், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி என்னுள் எப்போதும் இருந்து வந்துள்ளது என்றார் சரளா. அரேபிய பெண்கள் அதிகம் நாட்டம் செலுத்தி வரும் இடுப்பழகை வெளிப்படுத்தும் பெலி நடனத்தில் இவருக்கும் ஆர்வம் உள்ளது. இந்த அழகு ராணி போட்டியில் இவர் வழங்கிய பெலி நடனமே அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடித்தந்தது. இந்த அனைத்துலக திருமதி அழகு ராணி போட்டியில் இடுப்பை அசைத்தாடும் பெலி நடனத்தை வழங்கினேன். அனைவரும் மிரஸலாகிப் போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்றார் சரளா. தனி ஆற்றலை வெளிப் படுத்துவதில் திறமைசாலி, தன்னம்பிக்கையாளர் என்ற இரு பிரிவுகளில் எனக்கு வெற்றி கிட்டியது குறித்து பெருமை கொள்கிறேன். ஒரு பெண்ணாக இருந்தால் வாழ்க்கையில் எந்த பிரச்சினை வந்தாலும் எப்போதும் தைரியத்துடனும், துணிச்சலுடனும் நாம் செயல்பட வேண்டும். எதையும் எதிர்த்து துணிந்து நின்று போராட வேண்டும் என்று சரளா உண்மையான நம்பிக்கையுடன் கூறினார். குணாளன் - தேன்விழி தம்பதியரின் மூன்று பிள்ளைகளில் ஒருவரான இவர் சிறுவயது முதல் நடனம் கற்றுக்கொண்டவர். இவர் தலைநகர் தாமான் கோசாஸ் அம்பாங் இடைநிலைப்பள்ளியின் மாணவி. தமிழில் மிகவும் அழகாகவும், சரளமாகவும் பேசும் ஆற்றல் எங்கிருந்து வந்தது? பள்ளிக்கூடத்தில் தமிழ்க்கழக நடவடிக்கைகளில் தாம் அதிகமாக பங்கேற்றது இதற்கு உறுதுணையாக இருந்துள்ளது என்று அவர் நினைவு கூர்ந்தார். தனது கணவர் சி.விஜயகுமார் எல்லா சூழல்களிலும் தனக்கு பக்கபலமாக இருந்து வந்துள்ளதால் தம்மால் இந்த அளவிற்கு முன்னேற முடிந்தது என்று தன் கணவருக்கு மகுடம் சூட்டுகிறார் சரளா.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்