கோலாலம்பூர், மலேசியாவில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஸாகீர் நாயக்கிற்கு சொந்தமான சொத் துக்களில் சிலவற்றை சட்ட ரீதியாக பறிமுதல் செய்ய அனுமதி கோரி இந்தியாவின் அமலாக்க இயக்குனராக (இடி) பம்பாயில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருக்கிறது. மலேசியாவில் நாங்கள் அடையாளம் கண்டிருக்கும் ஸாகீரின் சொத்துக்கள் சிலவற்றை சட்ட ரீதியாக பறிமுதல் செய்வதற்கான அனுமதி கடிதத்தை (எல்ஆர்) வழங்க கோரி நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று சிறப்பு (இடி) வழக்கறிஞர் ஹிட்டன் வெனிகாவ்ன்கர் கூறியதாக பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (பிடிஐ) தெரிவித்தது. வெளிநாட்டு நீதிமன்றத்திடம் நீதித்துறை உதவியை நாடுவதற்காக ஒரு நாட்டில் உள்ள நீதிமன்றத்திடம் முறை யான அனுமதியை பெறுவதற்கே இந்த கடிதம் கோரப்படுகிறது.இந்த எல்ஆர் கடிதத்திற்காக கடந்த வாரம் பண மோசடி சட்டத்தின் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்திடம் இந்தியாவின் நிதி தொடர் பிலான குற்றப் புலனாய்வு அமைப்பான இடி விண்ணப்பம் செய்ததாக பிடிஐ தெரிவித்தது. ஸாகீர் நாயக் வெறுப்பைத் தூண்டும் உரைகளை ஆற்றிய தாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவிகள் செய்ததாகவும் பல கோடி ரூபாய் பண மோசடி புரிந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பதாக அந்த செய்தி நிறுவனம் கூறிற்று. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்காளதேசத்தில் ஒரு கஃபே மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அவர் இந்தியாவில் இருந்து தப்பி யோடி னார். இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்தனர். நாயக்கின் உரைகளால் தான் கவர்ந்து இழுக்கப்பட்டதாக பயங்கரவாத சந்தேகப் பேர்வழிகளில் ஒருவன் கூறினான்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்