img
img

ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் காப்பார் ஆற்றுப்பாலத்திற்கு ஆபத்து
செவ்வாய் 04 ஜூலை 2017 18:10:20

img

பி. எம். குணா காப்பார். பத்தாண்டுகளுக்கும் மேல் பழைமையான இங்குள்ள காப்பார் பெரிய ஆற்றுப் பாலம் பாதுகாப்பாக இல்லை என்று பொது மக்கள் முறையிட்டனர். பாதசாரிகளும், பள்ளிப்பிள்ளைகளும் அதிகம் பயன்படுத்தும் சுங்கை பெசார் காப்பார் ஆற்றுப் பாலம் வலுவிழந்து வருவதாகவும் அதன் தரத்தை உயர்த்துவதற்கு பொதுப் பணித் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்தினர். மோட்டார் சைக்கிளோட்டிகள், மிதி வண்டியோட்டிகள், இரண்டு இடைநிலைப் பள்ளி மாணவர்கள், தொழிற்சாலை வேலையாட்கள் உட்பட தினமும் ஆயிரக்கணக்கான வர்கள் பகலிலும். இரவிலும் அந்த முதன்மையான ஆற்றுப் பாலத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் மரக் கட்டைக ல் கட்டப்பட்ட அப்பாலம் தற்சமயம் மக்கிப் போய் விட்டது என்று பொது மக்கள் புகார் எழுப்பினர். மேலும் ஆற்றின் இரு புறங்களிலும் புதர் மண்டிக் கிடப்பதால் அப்பாலம் குறிப்பாக இரவில் பாதுகாப்பானதாக இல்லை என்று அவர்களில் சிலர் கூறினர். பாலம் அமைந்துள்ள பகுதியில் தெரு விளக்குகளும் சில வேலைகளில் செயலிழந்து போவதால் பொது மக்களின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட் டுள்ளதாகவும் அறிய வருகிறது.காப்பார் ஜாலான் ஹம்சா ஆலாங் இராஜதுரை தங்கையா (வயது 63), தாமான் இந்தான் சுரேஸ் சுப்ரமணியம் (வயது 52), ரவிச்சந்திரன் சத்தியா (வயது 49), கம்போங் பத்து செம்பிலான் குணசீலன் ஏழுமலை (வயது 39), தாமான் இந்தான் ஜெயா கணபதி சுப்பராயன் (வயது 70), மாரி முத்து முத்துசாமி (வயது 62), தாமான் முத்தியாரா செல்வம் (வயது 56), தாமான் செமந்தா சத்தியசீலன் நடராஜா (வயது 40), கம்போங் பத்து செம்பிலான் கல்தீப் சிங் அர்வான் சிங் (வயது 38), தாமான் அமான் கேசவன் மனோகரன், ஆகியோர் 10 ஆண்டுகளுக்கும் மேல் பழை மையான சம்பந்தப்பட்ட பாலத் தின் தரம் உயர்த்தப்பட வேண் டும் என கோரிக்கை விடுத்தனர். அப்பாலம் கட்டப்பட்டு இதற்கு முன் ஒரு முறை மட்டுமே சீரமைக்கப்பட்டதாக அறிய வருகிறது. பரப்பரப்பான காப்பார் சாலை சமிஞ்சை விளக்குப் பகுதியை தவிர்ப்ப தற்கு பொது மக்களும் பள்ளி பிள்ளைகளும் அப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அது காலத்துக்கு ஏற்றதாக இல்லை என்றும் இரும்பிலான உறுதியான அகன்ற பாலம் கட்டுவதற்கு பொதுப் பணித் துறை முன் வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img