கோலாலம்பூர், உபர், கிரேப் போன்ற வாகன சேவைகளுக்கான உரிமத்தை வழங்குவதற்கு முன்னர் டாக்சி ஓட்டுநர்களின் நலனை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்று பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி கூறினார். பெட்டாலிங்ஜெயா சிவிக் செண்டரில் நேற்று நடைபெற்ற மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், டாக்சி ஓட்டுநர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணப்படாத வரையில், உபர், கிரேப் சேவைகளுக்கு உரிமம் வழங்குவதையும் அந்த சேவைகளை சீர் படுத்துவதையும் தாமதப்படுத்தும்படி அரசாங்கத் தைக் கேட்டுக் கொண்டார். கார் வாடகைக் கட்டணங்களை டாக்சி ஓட்டுநர்கள் தினசரி செலுத்த வேண்டும் என கோரும் நடைமுறையை ரத்து செய்வது மீது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களில் பலர் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையும் சுமையும் இதுவாகும் என்று அவர் கூறினார். டாக்சி ஓட்டுநர்கள் மீது வாடகைக் கட்டணங்கள் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்து கின்றன என்றும் டாக்சி சேவைக்கும் உபர் மற்றும் கிரேப் சேவை களுக்கும் இடையே ஆரோக்கியமற்ற போட்டி நிலவு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.உபர் மற்றும் கிரேப் வாகனங்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள் டாக்சி ஓட்டுநர் களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ரபிஸி மேலும் கூறினார். அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி யைப் பிடித்தால், தினசரி டாக்சி வாடகைக் கட்டணம் ரத்து செய்யப் படுவதை நான் உறுதி செய்வேன் என்று அவர் அறிவித்தார். நாங்கள் தோல்வி அடைந்தாலும் இந்த நடைமுறையை அரசாங்கம் ரத்து செய்யும் வரையில் நான் போராடுவேன் என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு உபர் மற்றும் கிரேப் போன்ற சேவைகளால் எழுந்த போட்டிகளுக்கு மத்தியில், கிள்ளான் பள் ளத்தாக்கைச் சேர்ந்த 35,000 பட்ஜெட் டாக்சி ஓட்டுநர்களில் சுமார் 10,000 பேர் வாடகைக் கட்டணங்களை செலுத்த முடியாத நிலையில் தங்களுடைய வாகனங்களை நிறுவனங்களிடமே திரும்ப ஒப்படைத்து விட்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்