img
img

பணம் கொடுக்க மறுத்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்.
செவ்வாய் 04 ஜூலை 2017 15:52:44

img

துர்க்கா பகாவ், பணம் கேட்டு கொடுக் காததால் ஆத்திரமடைந்த இளைஞர் தன் தந்தையை பாராங்கினால் கழுத்தை வெட்டி கொடூரமாக கொன்றார். இந்த பயங்கரச் சம் பவம் பகாவ், பெல்டா லூய் தீமோர் நில குடியேற்றப் பகுதியில் நிகழ்ந்தது. நில குடியேற்றத்தில் உள்ள ஒரு வீட்டில் எஸ்.வேலாயுதம் (வயது 73) என்பவரே கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதாக ஜெம்பூல் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் நோர் ஜாய்னி முகமட் நோர் கூறினார். தகவல் கிடைத்ததும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் வேலாயுதம் உயிர் ஊசலாடுவதைக் கண்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வண்டிக்கு தகவல் கொடுக்கப் பட்டது. எனினும், ஆம்புலன்ஸ் வண்டி வருவதற்குள் அவர் மரணமடைந்ததாக நோர் ஜாய்னி விளக்கினார். பெல்டா குடியேற்றவாசியான கொலை செய்யப்பட்ட வேலாயுதத்திடம் அடிக்கடி பணம் கேட்டு நச்சரிப்பதை கண்டித்ததால் சினமடைந்த மகன் பாராங் கத்தியால் அவரைத் தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவானதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார். கொலை குற்றவியல் 302இன் கீழ் தீவிர புலன் விசாரணை மேற் கொள்ளப்படும். இச்சம்பவத்தில் 18 சிஎம் நீளமுள்ள பாராங் கத்தி கைப்பற்றப்பட்டிருப்பதுடன் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு சிரம்பான் துங்கு ஜபார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிவப்பு நிற காரில் தப்பிச் சென்ற சந்திரபோஸ் என்ற முகமட் நஜிரி அப்துல்லா என்ற நபரை போலீஸ் தீவிரமாக தேடி வருவதாக நோர் ஜாய்னி தெரி வித்தார். கொலை செய்யப்பட்ட வேலாயுதத்திற்கு மனைவி, 6 பிள்ளைகள் இருப்பதுடன் ஜெம்பூல் வட்டாரத்தில் பல சமூக சேவைகளிலும் எழுத்தாள ராகவும் சிறந்த பாடகராகவும் திகழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img