img
img

மருத்துவ பட்டதாரிகளுக்கு மலாய் மொழிக்கான தேவை தளர்த்தப்படுகிறது.
திங்கள் 03 ஜூலை 2017 13:02:39

img

கோலாலம்பூர், கிரேட் UD41 குத்தகை மருத்துவ அதிகாரிகளாக நியமனம் செய்யப்படவுள்ள தகுதி வாய்ந்த மருத்துவ பட்டதாரிகளுக்கு மலாய் மொழிக்கான தேவை தளர்த்தப்படுவதாக பொதுச்சேவை இலாகா அறிவித்துள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அனைவரும் ஈராண்டுகளுக்கு பட்டதாரி பயிற்சி யினை மேற்கொள்வதுடன் சுகாதார அமைச்சுடன் ஈராண்டுகள் பணி யாற்ற வேண்டும் என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று கூறினார். எனினும், அமைச்சில் மருத் துவ அதிகாரிகளாக நிரந்தர நிய மனத்திற்கு மனு செய்யும் விண் ணப்பதாரர்கள் இந்த பாடத் தில் தேர்ச்சிப் பெற்றி ருப்பது அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.நிரந்தர சேவை திட்டத்தின் கீழ் நியமனம் பெற விரும்பும் UD41 மருத்துவ அதிகாரிகள் மலாய் மொழியில் தேர்ச்சிப் பெற முயற்சிக்க வேண்டும் என்றார் அவர். மற்ற வகை சேவை திட்டங்களுக்கு மலாய் மொழியில் கிரெடிட் புள்ளிகள் பெறுவது போன்று உய ரிய தேவைகள் உள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். முதல் முறையாக எஸ்.பி.எம் தேர்வை எழுத பதிவு செய்திருக்கும் தனியார் மாணவர்கள் இந்த சேவைக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, முழு தேர்வுக்கும் அமராமல் மலாய் மொழியை தனி பாடமாக எழுதுவதற்கு தேர்தல் வாரிய இயக்குநரிடம் விண்ணப்பம் செய்யலாம் என்று டாக்டர் நூர் ஹிஷாம் விளக்கம் அளித்தார்.தனியார் துறை மாணவர்களுக்கு இந்த வசதியை ஏற்படுத்தி தருவதற்கு கல்வி அமைச்சுடனும் சோதனை வாரி யத்துடனும் சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தும் என்றார் அவர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img